rahul: ராகுல் காந்தி, பிரியங்கா கைது: குடியரசுத் தலைவர் மாளிகை சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் மாளிகையே நோக்கிச் சென்றபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் மாளிகையே நோக்கிச் சென்றபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விஜய் சவுக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசுக்கு நெருக்கடி: கறுப்பு ஆடை அணிந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் போராட்டம்
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தி வருகிறது
நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கறுப்பு அடை அணிந்து வந்தனர். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் முதல் வாயிலில் நின்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒரு தரப்பினர் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் பாதையில் போலீஸார், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியாக குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி வந்தபோது, விஜய் சவுக் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த பேரணியில் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. அந்த பேரணியில் வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி உயர்வு குறித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் முயன்றபோது அவர்களுக்கான ஜனநாயக உரிமை இன்றும் மறுக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அச்சப்படுபவர்கள் மட்டுமே அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் என்பது தெளிவாகிறது” எனத் தெரிவித்தார்.