Asianet News TamilAsianet News Tamil

rahul gandhi: narendra modi: ஜனநாயகம் மரணி்ப்பதை தேசம் பார்த்து வருகிறது: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு

நாட்டில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசில் ஜனநாயகம் படிப்படியாக மரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுகளாக ஒவ்வொரு செங்கலாக கட்டப்பட்டவை அனைத்தும் அழிகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

Rahul Gandhi Attacks Government, Claiming "Onset of Dictatorship"
Author
New Delhi, First Published Aug 5, 2022, 10:24 AM IST

நாட்டில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசில் ஜனநாயகம் படிப்படியாக மரித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுகளாக ஒவ்வொரு செங்கலாக கட்டப்பட்டவை அனைத்தும் அழிகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆவேசத்துடன் தெரிவித்தார்.


நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையின்மைஅதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் டெல்லியில் இன்று போராட்டம் நடத்துகிறது. 

சுதந்திரதினத்தை முன்னிட்டு தேசியக் கொடியை எங்கெல்லாம் ஏற்ற அரசு திட்டமிட்டுள்ளது தெரியுமா?

காங்கிரஸ் கட்சியின்பொதுக்குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடியின் இல்லத்தை கெரோ செய்ய உள்ளனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

Rahul Gandhi Attacks Government, Claiming "Onset of Dictatorship"
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரில் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இதனிடையே நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.  இதையடுத்து, காங்கிரஸ் கட்சி தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

PWD அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி பள்ளிகளின் நிலை என்ன? அம்பலப்படுத்திய கடிதம்!!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காலை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது


நாட்டில் பாஜகவின் ஆட்சியில் ஜனநாயகம் செத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா எவ்வாறு செங்கல்செங்கலாக எழுப்பப்பட்டு கட்டமைக்கப்பட்டதோ அது நம் கண்முன்னே அழிந்து வருகிறது.

Rahul Gandhi Attacks Government, Claiming "Onset of Dictatorship"

சர்வாதிகாரத்தின் சிந்தனைக்கு மாறாக யாராவது குறுக்கே நின்றால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும், சிறையில் தள்ளப்படுவார்கள், கைதுசெய்யப்படுவார்ள், தாக்கப்படுவார்கள்.

கர்நாடகாவில் ஏசியாநெட் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட அம்ரித் மகோத்சவ் யாத்திரை நிறைவு

நாங்கள் நடத்தும் போராட்டத்தின் நோக்கம் மக்கள் பிரச்சினைகள்தான். விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு,சமூகத்தில் வன்முறை அதிகரிப்பு போன்றவை எழுப்பக்கூடாது. மத்திய அரசின் ஒரே நோக்கம், 4 முதல் 5முக்கிய மனிதர்களின் நலன்களைக் காப்பதுதான். இந்த சர்வாதிகாரி, 2 அல்லது 3 கோடீஸ்வரர்களுக்காகவே நடத்துகிறார்

உங்கள் அனைவருக்கும் தெரியும், இந்தியாவுக்கும் தெரியும். சர்வாதிகாரத்துக்கு எதிராக ஏதாவது சிந்தனை எழுந்தால், அது யாராக இருந்தாலும் பார்க்கமாட்டார்கள். எந்த மாநிலத்திலிருந்து வந்தாலும், எந்த மதத்திலிருந்து வந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கருதாமல் தாக்கப்படுவார்கள். சிறையில் அடைக்கப்படுவார்கள். 

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தினாலும் அங்கு ஏதும் கிடைக்கவில்லைஎன்பது அனைவரும் அறிவார்கள். என்னுடைய பணி ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்ப்பது, அதை இன்னும் அதிகமாகச் செய்வேன், இன்னும் அதிகமாக தாக்கப்படுவேன். என்னை தாக்கினால் நான் மகிழ்ச்சிஅடைவேன்.

Rahul Gandhi Attacks Government, Claiming "Onset of Dictatorship"

மத்திய அரசு தொடர்ந்து அச்சுறுத்தலாம் ஆனால் காங்கிரஸும், நாங்களும் பயப்படமாட்டோம். நாங்கள் ஒரு சித்தாந்தத்துக்காகப் போராடுகிறோம், கோடிக்கணக்கான மக்கள் அதை விரும்புகிறார்கள். இதனால்தான் நாங்கள் சோனியா காந்தி குடும்பம் தாக்கப்படுகிறது. ஜனநாயகம்,சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாக நாங்கள் போராடுகிறோம்.

இதற்காகத்தான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களும் உயிரை இழந்தார்கள். இதைக் காக்க வேண்டியது எங்கள் கடமை

இந்தியா பிளவுபடும்போது, இந்துக்களும், முஸ்லிம்களும் சண்டையிடும்போது நாங்கள் வேதனைப்படுகிறோம். தலித் என்பதற்காக ஒருவர் தாக்கப்படும்போது, பெண் தாக்கப்படும்போது, நாங்கள் வேதனைப்படுகிறோம்.இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். இது குடும்பம் அல்ல, இது சித்தாந்தம். 

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios