PWD அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி பள்ளிகளின் நிலை என்ன? அம்பலப்படுத்திய கடிதம்!!
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கல்வி அமைச்சகம் எழுதிய கடிதம் மூலம் சத்யேந்தர் ஜெயின் தலைமையிலான PWD அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி பள்ளிகளின் ஊழல் மற்றும் மோசமான நிலை அம்பலமாகியுள்ளது.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கல்வி அமைச்சகம் எழுதிய கடிதம் மூலம் சத்யேந்தர் ஜெயின் தலைமையிலான PWD அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி பள்ளிகளின் ஊழல் மற்றும் மோசமான நிலை அம்பலமாகியுள்ளது. பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, டெல்லி அரசுக்கு சொந்தமான ஆவணத்தையும் டெல்லி அரசு பள்ளிகளின் உண்மை நிலை பற்றியும் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
இதுக்குறித்த அந்த கடிதத்தில், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் மற்றும் அரசின் முன்னுரிமைத் துறை கல்வி. சிறந்த தரமான கல்விக்க்கு உள்கட்டமைப்பு, சுகாதாரமான மற்றும் இணக்கமான சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து வசதிகளுடன் கல்வி முறையில் தரமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் கட்டுமான பணிகள் நிறைவடையாதது, தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்துதல், பல்வேறு குறைபாடுகள் என பல்வேறு பள்ளிகளில் புகார்கள் வந்துள்ளன.
இதையும் படிங்க: சிக்குகிறார் சஞ்சய் ராவத் மனைவி வர்ஷா; அமலாக்கத்துறை நோட்டீஸ்!!
இந்த குறைபாடுகள் கல்வி இயக்குனரகத்தின் நோக்கத்தையே பாதிக்கிறது. பெறப்பட்ட புகார்களின் பட்டியல் இந்த கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் காரணமாக, பள்ளிகளை நடத்துவது மிகவும் கடினமாக உள்ளது. மேலும் இது மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளியின் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள புகார்கள் குறித்த உங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.