136 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!
கேரளா இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதை அடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என இடுக்கி மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாற்றில் இரவு 7 மணி வரை சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 6592 கன அடி நீர் வரத்து இருந்தது. தற்போது சராசரி நீர்வரத்து 1912 கனஅடியாக உள்ளது.
இதையும் படிங்க: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்.. அருவிகளில் குளிக்க 3 வது நாளாக தடை..
இதற்கிடையில், கேரளாவின் இரண்டாவது பெரிய அணையான மலம்புழா அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையை அடுத்து, நாளை காலை 9 மணிக்கு மேல் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.06 மீட்டராக இருந்தது. தற்போதுள்ள மழை பெய்து வரும் சூழ்நிலையில் 112.99 மீட்டர் உள்ள நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பாலக்காடு மாவட்ட தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே!! கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை..
மேலும் இதன் காரணமாக பாரதப்புழா, முக்கைப்புழா மற்றும் கல்பாத்தி புழா கரையோரங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், மீன்பிடி மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர், மன்னார்க்காடு மற்றும் ஆலத்தூர் ஆகிய மூன்று தாலுகாக்களில் ஐந்து நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.