பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானில் உளவாளியை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். உளவாளியிடம் இருந்த பாகிஸ்தான் சிம் கார்டுடன் செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் பெரோசபூர் எல்லைப் பகுதியில் சோதனை சாவடியில் பகுதியில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகமளிக்கும் வகையில் நடமாடிக்கொண்டு இருந்தார். மேலும் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தார். இதனை கண்டதும் எல்லைபாதுகாப்பு படையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

 

உடனே அவர் வைத்திருந்த செல்போனை தூக்கி எறிந்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் செல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த செல்போனை சோதனை செய்த போது பாகிஸ்தான் சிம் கார்டுடன் இருந்தது. அதில் 8 பாகிஸ்தான் குழுக்கள் சேர்க்கப்பட்டு இருந்தது.

மேலும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களின் 6 செல்போன் எண்கள் பதியப்பட்டிருந்தது. இவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷாரிக் என்பது தெரிவந்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.