Asianet News TamilAsianet News Tamil

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு.. புதுச்சேரி அரசு அறிவிப்பு..

புதுச்சேரியில் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 34 சதவீதமாக இருந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளதால் 38% ஆக உள்ளது. 
 

Puducherry government increase 4% in subsidy of pensioners
Author
First Published Oct 15, 2022, 1:10 PM IST

கடந்த மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:லஞ்ச ஒழிப்புத்துறை மெகா ரெய்டு.. கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல்.. தலையை சுற்ற வைக்கும் வசூல் வேட்டை..

இதனையடுத்து கடந்த 8 ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது ஓய்வூதியதாரர்களுக்கான 4% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை புதுச்சேரி நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 34 சதவீதமாக இருந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தற்போது 4% உயர்த்தப்பட்டுள்ளதால் 38% ஆக உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது  கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய மாகாணங்களின் நிர்வாக தலைமை அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு குறித்து விவரம் அரசு தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:பரந்தூர் விமான நிலையம்.. 13 கிராம மக்கள் நடத்திய போராட்டம் தற்காலிக வாபஸ்..

Follow Us:
Download App:
  • android
  • ios