புதுவையில் தனியார் சிறுஅளவில் பீர் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.   நாள் ஒன்றுக்கு 1000 லிட்டர் பீர் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மதுபானங்களுக்கு பெயர் பெற்ற  பாண்டிச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள், 150 க்கும் மேற்பட்ட சாராயக்கடைகளும், 100 கள்ளுகடைகளும் உள்ளன. பாண்டிச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற மாநிலங்களை விட இங்கு மிகவும் விலை குறைவு என்பதால், இவற்றை ருசித்து பார்க்க ஏராளமான வெளியூர் மற்றும் உள்ளூர்வாசிகள் இருப்பதால் பாண்டிச்சேரிக்கு என்று தனி  குடிமகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், பாண்டிச்சேரியில் தனியார் சிறுஅளவில் பீர் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ.2 லட்சம் செலுத்தி உரிமம் பெற்று நாள் ஒன்றுக்கு 1000 லிட்டர் பீர் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய திட்டதை அரசு அறிவித்துள்ளது.  

அதாவது, தனியார் தயாரிக்கும் பீரை பாட்டிலில் அடைத்து விற்க அனுமதி கிடையாது. அரசு அனுமதித்ததைப் போல தயாரிக்கும் இந்த  பீரை டம்ளரிலும், ஜக்குகளிலும் தான்  விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.