தயவு செய்து இங்கே வந்துறாதீங்க.. கையெடுத்து கும்பிடும் வயநாடு அதிகாரிகள்- காரணம் என்ன.?

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது. மக்கள் கூட்டம் காரணமாக மீட்புப் பணியில் இடையூறு ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Public access to the Wayanad landslide area has been banned KAK

உயிர்பலி வாங்கிய நிலச்சரிவு

நாட்டையே அதிரவைத்த வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணி இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு வயநாட்டில் உள்ள முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளை மண்ணோடு மண்ணாக புதைத்தது. இந்த பேரிடரில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் 300க்கும் மேற்பட்டவர்களின் நிலை தெரியவில்லை. 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. விபத்து நடைபெற்று 20 நாட்கள் ஆகியும் இன்னும் மீட்பு பணி மற்றும் நிவாரண பணி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால்  நிலச்சரிவால் அடித்து வரப்பட்ட மிகப்பெரிய பாறைகள், கற்களை அகற்றும் பணியிலும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் எப்போது இடிந்து விழும் என்ற அச்சமாக நிலையும் நீடித்து வருகிறது. ஒரு சில இடங்களில் இன்னும் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளுக்கு தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கனோர் படையெடுத்து வருகின்றனர். 

Public access to the Wayanad landslide area has been banned KAK

சம்பவ இடத்திற்கு யாரும் வராதீங்க

பாதிக்கப்பட்ட இடத்தை சுற்றி பார்ப்பதற்காகவே கூட்டம் கூட்டமாக மக்கள் திரள்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்  மேகஸ்ரீ கூறும் போது  தினமும் ஏராளமானோர் வயநாட்டை பார்வையிட வருகின்றனர். அவர்கள் இந்த நிலச்சரிவு பகுதிக்கும் வருகின்றனர். அவர்களால் அதிகளவில் இடையூறு ஏற்படுகிறது. இதனை  சொல்லி மாளாது. எனவே தற்போதைய நிலையில்  யாரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தயவு செய்து யாரும் இங்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் உள்ள பாலத்தில் வெளியூரில் இருந்து வரும் மக்கள் நுழைய முடியாத படி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதே போல அந்த பகுதியில் உள்ள அருவியில் குளிக்கவும் தடை விதிகப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைபவர்களை கண்டறியவும் ரோந்து பணியை வனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. 

வயநாடு நிலச்சரிவு.! பாதிக்கப்பட்டவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் மனித நேயம் - நெகிழும் கேரள மக்கள்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios