ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு, பீகார் மாநிலத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.
கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று கடந்த 8-ந்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்பின், கடந்த 10-ந்தேதியில் இருந்து வங்கிகளில் ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லிமாளாது. ஏ.டி.எம். இயந்திரங்களில் நிரப்பப்பட்ட பணமும் உடனடியாக தீர்ந்து விடுவதால் மக்கள் அன்றாடச் செலவுக்கு பணத்துக்காக அல்லாடுகின்றனர். இந்த பாதிப்புக்கு நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளிகளும் தப்பவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியின் அறிவிப்பால் இங்கு வரும் வரும் வாடிக்கையாளர்கள் தரும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வாங்க மறுப்பதால், தற்போது வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு கூட சாப்பாடுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இது தவிர, ‘கோத்தாஸ்’ எனப்படும் ஆடல், பாடலுடன் இருக்கும் குடில்கள் இருக்கின்றன. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
“ஒருவாரமாகி விட்டது, ஒரு வாடிக்கையாளர் கூட வரவில்லை. ஏற்கனவே மதுவிலக்கால் வாடிக்கையாளர் வருகை பாதியாக குறைந்து விட்டது. இப்போது பிரதமர் மோடியின் அறிவிப்பால், ரூ.1000, ரூ.500 நோட்டுடன் வரும் வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்கமுடியவில்லை '' என்று கோத்தாஸ் குடிலில் தபேலா வாசிக்கும் கலைஞரான அக்ரம்கான் தெரிவித்தார்.
ஒரு பாலியல் தொழிலாளி கூறுகையில், “ பிரதமர் மோடி இதுபோன்ற முடிவை நாள்கள் ஆதரிக்கிறோம். அதே சமயம், இதுபோன்ற முடிவை எடுப்பதற்கு முன் எங்களைப் போன்றவர்களை நினைத்துப்பார்க்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
