நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆனந்த் சர்மா விவாதித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதால், நாட்டில் உள்ள ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பணத்துக்கு கட்டுபாடு விதிக்க அரசுக்கு உரிமை இல்லை. கருப்பு பணம் சூட்கேசில் தூங்காது. நிலத்திலும், தங்கத்திலும் முதலீடு செய்யப்பட்டு இருக்கும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. மாறாக விவசாயிகளும், ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. அவர்களின் பட்டியலை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏழை மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர் என பிரதமர் மோடி பொது மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதற்காக பிரதமர் மோடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.