கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த பிரணவ், வலது காலால் தன் தேவையைப் பூர்த்திசெய்வதோடு ஓவியமும் வரைபவர். தனது 21-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து தன்னால் இயன்ற ஐந்தாயிரம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது அவர் கால்களால் எடுத்த செல்பி வைரலானது. மிகச்சிறந்த செஃல்பி இது தான் என மக்கள் பாராட்டித் தள்ளினர். 

உடனே பிரணவை அழைத்த கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, தன்னுடன் செல்பி ஒன்றை எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு சில மாதங்களுக்கு கேரளாவில், ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் மாநில அளவிலான படகுப் போட்டி கிரிக்கெட் வீரர் சச்சின் கலந்து கொண்டார். அப்போது அவரைச் சந்தித்து பேசிய பிரனவ்  சச்சின் ஓவியத்தைப் பரிசாக் கொடுத்தார். அப்போது சச்சின் டெண்டுல்கர் ப்ரணவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி புகழ்ந்து தள்ளினார்.

இப்போது ப்ரணவுடன் அவர் எடுக்கும் செஃபிக்காக நடசத்திரங்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதனால் ப்ரணவ் நட்சத்திர புகழை பெற்று வருகிறார்.