கர்நாடகாவில் போட்டி போட்டு போஸ்டர் ஓட்டும் சித்தராமையா - டி.கே. சிவகுமார் ஆதரவாளர்கள்!
கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே போட்டி நிலவும் சூழலில் இருவரின் ஆதரவாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு போஸ்டர் ஒட்டியும் பேனர்கள் வைத்து தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி காணப்படுகிறது. இருவரது ஆதரவாளர்களும் தங்களுக்கு விருப்பமான தலைவரையே மாநில முதல்வராக அறிவிக்கக் கோரி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், கனகபுரா தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் நாகராஜை 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா பாஜக வேட்பாளர் வி. சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் யார்? கடினமான முடிவுவை எடுக்கும் பொறுப்பு கார்கே கையில்!
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் பெங்களூருவில் உள்ள இல்லத்திற்கு வெளியே அவரை "கர்நாடகத்தின் அடுத்த முதல்வர்" என்று குறிப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி இருக்கின்றனர். இதேபோல டி.கே. சிவகுமார் ஆதரவாளர்களும தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு டி.கே.சிவகுமாரை மாநில முதல்வராக அறிவிக்கக் கோரி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தோல்வி தோல்விதான்! கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை
224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த மே 10ஆம் தேதி நடைபெற்று, நேற்று (சனிக்கிழமை) முடிவுகள் வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா 66 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளைப் பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வென்றுள்ளனர். கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா மற்றும் சர்வோதய கர்நாடகா பக்ஷா ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் பாஜகவைவிட அதிக அளவு வாக்குகளைப் பெற்று முன்னேறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் கட்சி 42.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைவிட 4.86 சதவீதம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
கேரளா வந்த கப்பலில் ரூ.12,000 கோடி போதைப் பொருள் பறிமுதல்