கேரள கடற்கரைக்கு வந்த கப்பலில் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாக 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 2,500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
சனிக்கிழமை கேரளாவுக்கு வந்த கப்பலில் இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எடுத்த கூட்டு நடவடிக்கையில், சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 2,500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்குக் கொண்டுசெல்ல 134 மூட்டைகளில் சுமார் 2,500 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டது இதுவே நாட்டிலேயே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் இருந்து கடல்வழி போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் 'ஆபரேஷன் சமுத்திரகுப்த்' திட்டத்தின் ஒரு பகுதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக என்சிபி துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் கூறியுள்ளார்.
கர்நாடக தேர்தல் முடிவு ஏழை மக்களின் சக்திக்குக் கிடைத்த வெற்றி: ராகுல் காந்தி பேச்சு
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தெற்கு கடல்வழியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இது என்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இதுவரை சுமார் 3,200 கிலோ மெத்தம்பேட்டமைன், 500 கிலோ ஹெராயின் மற்றும் 529 கிலோ ஹாஷிஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022 இல், குஜராத் கடற்கரையில் பலுசிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இந்திய கடற்படையின் கூட்டுக் குழு நடந்திய சோதனையில் 529 கிலோ ஹாஷிஸ், 221 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் 13 கிலோ ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்பிறகு, 2022 அக்டோபரில் கேரள கடற்கரையில் ஈரானிய படகு தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து பெறப்பட்ட மொத்தம் 200 கிலோ உயர்தர ஹெராயின் கைப்பற்றப்பட்டது. ஈரானைச் சேர்ந்த 6 போதைப்பொருள் கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டனர்.
Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?
