கர்நாடக தேர்தல் முடிவு ஏழை மக்களின் சக்திக்குக் கிடைத்த வெற்றி: ராகுல் காந்தி பேச்சு

கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றி பற்றி பேட்டி அளித்த ராகுல் காந்தி, பாஜகவின் முதலாளித்துவ நண்பர்களின் சக்தியை ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi's 'love vs hate' jibe at BJP after Congress's big win in Karnataka

கர்நாடக மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமோக வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காங்கிரஸின் வெற்றி கர்நாடக மக்களின் வெற்றி என்றார். பாஜகவின் முதலாளித்துவ நண்பர்களின் சக்தியை ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

"கர்நாடகா மக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள தலைவர்களை நான் வாழ்த்துகிறேன். கர்நாடகாவில், ஏழைகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் நின்றது. நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. வெறுப்புக்கு எதிராக, அன்பை முன்னிருத்தி தேர்தலைச் சந்தித்தோம்" என்றார்.

Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?

இங்குள்ள மக்கள் அன்பின் மொழியை விரும்புகிறார்கள் என்பதை கர்நாடகா நாட்டுக்கே காட்டியுள்ளது என்றும் இது கர்நாடக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகாவில் 13 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ், அமோக வெற்றியை நோக்கி செல்கிறது. இதற்கிடையில், ஆளும் பாஜக 65 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றவை 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பிரியங்கா காந்தி சிம்லாவின் அனுமார் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் பெங்களூருவுக்கு இன்று வருமாறு தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

கர்நாடகாவில் எழுச்சி பெற்ற காங்கிரஸ்! தென் இந்தியாவில் பாஜகவுக்கு இடமில்லை! நெட்டிசன்கள் கருத்து

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios