தோல்வி தோல்விதான்! கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை

பாஜக பெற்ற வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும் தோல்வி தோல்விதான் என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Karnataka CM Basavaraj Bommai submits resignation to Governor after BJP's poll drubbing

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததையடுத்து பாஜகவின் பசவராஜ் பொம்மை சனிக்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பொம்மை தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பொம்மை காபந்து முதல்வராக நீடிப்பார். பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதானை 35,978 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இருப்பினும், காங்கிரஸ் கட்சி 135 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று அமோக வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் பாஜக அடைந்துள்ள படுதோல்விக்கு பொம்மை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Karnataka Assembly Election 2023: தெளிவான தீர்ப்பு கொடுத்த கர்நாடக மக்கள்; பாஜக எங்கே சறுக்கியது?

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிற முக்கிய கட்சித் தலைவர்கள் தலைமையிலான ஆடம்பரமான தேர்தல் பிரச்சாரங்கள் செய்த பாஜக மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை. மேலும், பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் 11 அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

"ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை 36 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். என்ன பகுப்பாய்வு செய்தாலும் தோல்வி தோல்விதான்" என்றார் பொம்மை.

"சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்ற பொம்மை, இன்னும் 8-10 மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ளது. இதனால் மக்களவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றும் உறுதிபடக் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம்.? கடைசி நேர பரபரப்பு - ஜெயநகரில் நூலிழையில் மாறிய முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios