கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம்.? கடைசி நேர பரபரப்பு - ஜெயநகரில் நூலிழையில் மாறிய முடிவு

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று அதிகாலை முடிவடைந்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
 

What is the final status of Karnataka vote count  How many seats for which party

சம பலமாக மோதிய காங்கிரஸ்- பாஜக

தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடாகவாகும், இந்த மாநிலத்தில் வெற்றியை பெற்று தங்களது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக பிரதமர் மோடி 20 முறைக்கு மேல் கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அமித்ஷா பேரணி,பொதுக்கூட்டம் என தங்களது பிரச்சாரத்தை  வலுப்படுத்தினார். அதே போல தென் மாநிலங்களில் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ் கட்சி தீவிரமாக உழைத்தது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவமாக அமைந்தது. இதனையடுத்து ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்தனர்.

பெரும்பான்யை பெற்ற காங்கிரஸ்

இதனையடுத்து இந்த தேர்தல் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும் என கருதப்பட்டது. கருத்து கணிப்புகளும் இரண்டு கட்சிக்கும் சம்பலம் இருப்பதாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியாவே எதிர்பார்த்த தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது. இதில் ஆரம்பம் முதல் காங்கிரசின் கை ஓங்கியது. இரண்டு கட்சிக்கும் இடையே 30 முதல் 40 தொகுதிகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னனியில் இருந்தது. இதனையடுத்து தங்களது தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக, தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவித்தது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார். இந்தநிலையில் கர்நாடகவில் உள்ள  224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பாஜக 65 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஜெயநகரில் நூழிலையில் தோற்ற காங்கிரஸ்

ஜெயநகர் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா மற்றும் ராமமூர்த்தி இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் ராமமுர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து இறுதி நிலவரமாக காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும் கைப்பற்றியது.  

இதையும் படியுங்கள்

கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios