Yediyurappa : சிறுமிக்கு பாலியல் தொல்லை.. எடியூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கில் திருப்பம் - கோர்ட் சொன்னதென்ன?

Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை கைது செய்ய அம்மாநில போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை அவர் மீது பிறப்பித்தது அனைவரும் அறிந்ததே.

Pocso case karnataka former cm yediyurappa granted bail says Karnataka high court ans

தன்னிடம் உதவி கேட்டு வந்த 16 வயது நிரம்பிய சிறுமியை கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா பலாத்காரம் செய்ததாக கூறி கடந்த மார்ச் மாதம் பெங்களூருவில் உள்ள சதாசிவ நகர் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த போலீசார் விசாரிக்க தொடங்கினர். 

இது குறித்து முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டபொழுது, தேர்தல் ஆதாயத்திற்காகவே இப்படிப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்படுகின்றது என்று கூறி, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். மேலும் தன் மேல் பதியப்பட்டுள்ள போஸ்கோ வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. 

Kuwait Fire Accident: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல் கொச்சி வந்தது!!

மேலும் அவர் அளித்த அந்த மனுவில் தன் மீது பொய்யான புகார்கள் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும், ஏற்கனவே இது போன்ற சில பொய்யான புகார்கள் தனது மீது சுமத்தப்பட்டு இருப்பதாகவும், அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் ஏற்கனவே இது போன்ற விவரங்கள் தொடர்பாக நான் நீதிமன்றத்தில் ஆஜராகியும், என் குரல் மாதிரிகளை மட்டும் சேமித்து விட்டு என்னை அனுப்பி விட்டார்கள். என்னிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவிலை எண்டுறம் அவர் கூறினார்.

இந்த சூழலில் தான் புகார் கொடுத்த அந்த 16 வயது சிறுமியின் தாய் திடீரென ஒரு நாள் மரணமடைந்தார். நுரையீரல் புற்றுநோய் காரணமாகத்தான் அவர் இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது. அதன் பிறகு அந்த சிறுமியின் சகோதரர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற நிலையை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் அந்த வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் இடையூறப்பாவிற்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்யக் கூடாது என்றும், வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை எடியூரப்பாவை கைது செய்ய தடை விதிப்பதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எடியூரப்பா வருகின்ற 17ஆம் தேதி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் என்றும் அந்த விசாரணைக்கு ஆஜரான பின்பு நீதிமன்றத்தில் காவல்துறை மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு: யாருக்கு எந்த துறை - முழு விவரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios