Kuwait Fire Accident: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல் கொச்சி வந்தது!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இவர்களில் ஏழு பேர் தமிழர்கள்.

Kuwait fire accident: air force plane with bodies of 45 Indians reached Kochi

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இவர்களில் ஏழு பேர் தமிழர்கள். உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்து இருந்தார்.

குவைத் நாட்டின் மங்கஃப் பகுதியில் இருக்கும் ஆறு மாடி கட்டிடத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கட்டிடத்தில் 176 இந்தியர்கள் தங்கியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டபோது, இவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டு இருந்தனர். மளமளவென பற்றிய தீயில் 48 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 33-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குவைத் தீவிபத்து.. உயிரிழந்த 7 தமிழர்கள்.. குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண உதவி - ஸ்டாலின் அறிவிப்பு!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் C-130J  விமானத்தில் இன்று கேரளா மாநிலத்தின் கொச்சி கொண்டு வரப்பட்டது. இந்த விமானத்தில் மத்திய விமானத்துறை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்கும் வந்திருந்தார். மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் விமானத்துறை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் குவைத் விரைந்து இருந்தார். அங்கு உயிரிழந்தவர்களின் உடலை சிறப்பு விமானத்தில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை குவைத் அரசுடன் இணைந்து செய்து இருந்தார். 

கொச்சி விமான நிலையம் வந்தடைந்த உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த மாநிலம் கொண்டு செல்வதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பப்படும் என்று தெரிய வந்துள்ளது. 

உயிரிழந்தவர்களில் 23 பேர் கேரளாவையும், 7 பேர் தமிழ்நாட்டையும், 3 பேர் உத்தரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் பீகார், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் உடல்களை கொச்சி விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன், மூத்த அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் வந்திருந்தனர். 

குவைத் தீ விபத்து: கருகி போன உடல்கள்... டி.என்.ஏ. சோதனை - தயார் நிலையில் விமானப்படை விமானம்!

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதாக குவைத் உறுதியளித்து உள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை தாயகம் திரும்பப் பெறுவதற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்து இருந்தது.  மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தெற்கு குவைத்தின் மங்கஃப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் டிஎன்ஏ சோதனை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios