Asianet News TamilAsianet News Tamil

குவைத் தீவிபத்து.. உயிரிழந்த 7 தமிழர்கள்.. குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண உதவி - ஸ்டாலின் அறிவிப்பு!

Kuwait Mangaf building fire Accident : குவைத் நாட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில், நேற்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Kuwait Fire Accident 7 tamil people died chief minister mk stalin announced relief fund ans
Author
First Published Jun 13, 2024, 10:17 PM IST

குவைத் நாட்டில் நேற்று புதன்கிழமை (12.04.2024) அதிகாலை நடந்த ஒரு பயங்கர தீ விபத்தில் 45க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 40 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்கின்ற அதிர்ச்சி தரும் தகவலும் வெளியானது. மேலும் உயிரிழந்த இந்த 40 இந்தியர்களில் ஏழு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதுகுறித்து தற்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட பதிவில் "குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திரு. எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தை சேர்ந்த திரு. கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த திரு. ரிச்சர்ட் ராய், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திரு. கருப்பணன் ராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது சரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்து வருகிறேன். 

Annamalai: தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி; அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக கொண்டு வருவதற்கு, குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அயலக தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும் தனி விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்தியா வந்தடைந்ததும், தமிழர்களின் உடல்களை உடனடியாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். 

இது மட்டுமல்லாமல் இந்த கொடிய தீபத்தில் காயமடைந்து குவைத் நாட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ் சொந்தங்கள் தொடர்பான விவரங்களை திரட்டுமாறு அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் இணைந்து அயலக தமிழர் நலத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். 

அமித் ஷா கண்டித்தாரா? வைரல் வீடியோ சர்ச்சைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios