அமித் ஷா கண்டித்தாரா? வைரல் வீடியோ சர்ச்சைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜனை அமித் ஷா மிரட்டிய வீடியோ வைரலான நிலையில், அதற்கு தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜனை அமித் ஷா மிரட்டிய வீடியோ வைரலான நிலையில், அதற்கு தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது பற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "2024 தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ஆந்திராவில் நேற்றுதான் நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன். தேர்தலுக்குப் பிந்தைய சவால்கள் பற்றி அவர் கேட்டறியவே அவர் என்னை அழைத்துப் பேசினார்" என்று கூறியுள்ளார்.
மேலும், அமித் ஷா தமிழகத்தில் எனது தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார் என்றும் அனைத்து தேவையற்ற யூகங்களையும் தவிர்த்து, தெளிவுபடுத்துவதற்காகவே இந்த விளக்கம் அளித்திருப்பதாகவும் தமிழிசை தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விட்டுக்கொடுக்காமல் வீம்பாக இருக்கும் பாஜக! ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல்!
ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் மேடையில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன் அமித் ஷா பேசிக்கொண்டிருந்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக அமித் ஷாவை சந்தித்து வணக்கம் தெரிவித்துவிட்டு செல்ல முற்பட்டார். அப்போது தமிழிசையை அழைத்துப் பேசிய அமித்ஷா, கோபமான முகத்துடன் முறைத்துப் பார்த்து, ஒற்றை விரலைக் காட்டி எச்சரித்தார்.
பதிலுக்கு தமிழிசை ஏதோ பேச முன்வந்தார். ஆனால் அதை கேட்கவே தயாராக இல்லாத ஷா தான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்பது போல முரட்டுத்தனமாக பேசினார். இந்தச் சம்பவத்தின் வீடியோ தெள்ளத் தெளிவாக வெளியாகி வைரலானது. பொது மேடையில் மூத்த தலைவரான தமிழிசையை ஷா அவமதித்துவிட்டார் என்று சர்ச்சை எழுந்தது. பாஜகவினர் ஷா அப்படியெல்லாம் பேசவில்லை என்று சப்பைக்கட்டு கட்டி பதில் கூறினர்.
விழா முடிந்து சென்னை திரும்பிய தமிழிசையின் இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல், வழக்கம்போல கலகலவென்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.
ஷாவின் அவமரியாதையான நடத்தைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன. குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் அவமரியாதையாக நடத்தியதை தமிழிசை பொறுத்துக்கொள்ளக் கூடாது என்று காங்கிரஸ் கூறியிருந்தது.
திருப்பத்தூரில் அரிய வகை பாம்பை கொன்று சமைத்துத் தின்ற இளைஞர் கைது!