பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் சென்றிருந்தபோது பாதுகாப்பு குறைபாடு பிரச்சினை ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் சென்றிருந்தபோது பாதுகாப்பு குறைபாடு பிரச்சினை ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 5ம் தேதி பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்துக்காக பஞ்சாப் மாநிலம் சென்றிருந்தார். அப்போது பிரதமர் மோடி திரும்ப வரும்போது பெரோஸ்பூர் பகுதியில் போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் பாலத்தின் பாதையை மறித்துக்கொண்டனர். இதனால் மேம்பாலத்திலேயே பிரதமர் மோடியின் வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் நின்றன.

ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் மிஸ்ஸிங்; அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்; பாஜகவின் கை வரிசையா?

பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்கக் கோரி லாயர்ஸ் வாய்ஸ் எனும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற உச்ச நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் 5 பேர்கொண்ட குழுவை அமைத்தனர்.

அந்த குழு விசாரணையை முடித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்திருந்தது . அதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அடங்க அமர்வு தீர்ப்பளித்தது.

cji : nv ramana:தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாளை ஓய்வு: உச்ச நீதிமன்றத்தில் 5 முக்கிய வழக்குகள் விசாரணை

அதில் “ பெரோஸ்பூர் போலீஸ் துணை சூப்பிரெண்ட் தனது கடமையை ஒழுங்காகச்செய்யவில்லை, சட்டம் ஒழுங்கையும் பராமரிக்கவில்லை. போதுமான போலீஸார் இருந்தபோதிலும், 2 மணிநேரத்துக்கு முன்பாக பிரதமர் பயணம் குறித்து அறிவித்தபோதிலும், பிரதமர் அந்தப் பதையில்வரும் வரை அவர் கடமையில் மெத்தனமாக இருந்துவிட்டார்” என அறிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினர்.