Vande Bharat: புதிய வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி முறையில் தொடக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய வந்தே பார்த் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும்.
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த ரயில் இரு மாநிலங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை இணைப்பதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
S Jaishankar: 2030க்குள் இந்தியப் பொருளாதாரம் உலகின் 3வது இடத்தைப் பிடிக்கும்: அமைச்சர் ஜெய்சங்கர்
“வந்தே பாரத் ரயில் இந்தியாவின் குறியீடாக உள்ளது. நாட்டு மக்களுக்கு அனைத்திலும் மேலான வசதிகளை வழங்குவதையே அது விரும்புகிறது. தற்சார்பு நிலையை நோக்கிய இந்தியாவின் நகர்வுக்கு இந்த ரயில் ஒரு குறியீடாகத் திகழ்கிறது” என்றும் பிரதமர் மோடி பேசினார்.
“வந்தே பாரத் ரயில் புதிய இந்தியாவின் உறுதி மற்றும் திறன்களின் சின்னமாகுவும் உள்ளது. இந்த ரயில், விரைவாக மாற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கும் தொடங்கிய இந்தியாவின் சின்னம். தனது கனவுகள் மற்றும் விருப்பங்களுக்காக அயராது உழைக்கும் இந்தியா, வெகு விரைவில் இலக்கை அடையும்” என்றும் நரேந்திர மோடி கூறினார்.
ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், உள்நாட்டிலும் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய ராணுவத்தின் பங்களிப்பு ஈடுஇணையற்றது என்று பாராட்டினார்.
வந்தே பாரத் ரயில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மற்றும் ஆந்திரா இடையே இயக்கப்படுகிறது.
Ukrine Russia Attacks: உக்ரைனில் ரஷ்யாவின் வெறியாட்டம்... பல கட்டிடங்கள் தரைமட்டம்!
சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த இந்த வந்த பாரத் ரயிலில் முழுவதும் ஏ.சி. பெட்டிகள் 14, சிறப்புப் பிரிவு பெட்டிகள் 2 என மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். 1,128 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம். இது முழுக்க முழுக்க இருக்கை வசதி மட்டும் கொண்டதாகும். 6 முதல் 7 மணிநேர பகல் நேரப் பயணம் என்பதால் இந்த ரயிலில் படுக்கை வசதி செய்யப்படவில்லை.