Ukrine Russia Attacks: உக்ரைனில் ரஷ்யாவின் வெறியாட்டம்... பல கட்டிடங்கள் தரைமட்டம்!
உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் நடந்த தொடர் ஏவுகணை தாக்குதல்களால் குறைந்தது 12 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்கள் நடத்திவருகிறது. உக்ரைன் ராணுவத்தை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாகச் சொல்லிக்கொண்டாலும், ரஷ்யா தொடர்ந்து குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதல் ரஷ்ய படைகள் உக்ரைனின் பல பகுதிகளில் பொது உள்கட்டமைப்பு வசதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்திவருகிறது. கீவ் நகரில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலில் வீடுகள் உள்பட பல கட்டிடங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
டினிப்ரோ நகரில் நடந்த தாக்குதலில் ஒன்பது மாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 3 வயது குழந்து உள்படி 12 பேர் இறந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. 60 பேருக்கும் மேல் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிகிறது.
உறைய வைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் இரவு முழுவதும் இடுபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருடன் இருப்பதால், மீட்புப் போராட்டம் தொடர்கிறது.
ஏவுகணை தாக்குதல்களால் மின்சாரம், தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தின் அளவை பாதியாகக் குறைக்க இலங்கை அரசு முடிவு
இதனிடையே, ரஷ்யா ராணுவத்தின் பயங்கரவாதத் தாக்குதலுக்கு போர்க்களத்தில்தான் முடிவு கட்ட முடியும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு இன்னும் அதிகமாக ஆயுதங்கள் தேவைப்படுவதாகவும் உலக நாடுகளிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைனின் குரலுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் வகையில் பிரிட்டன் அரசு தங்கள் ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.