Asianet News TamilAsianet News Tamil

25 ஆண்டுகளுக்குப்பின்! இன்டர்போல் 90-வது ஆண்டுக் கூட்டம்: அஞ்சல் தலை, ரூ.100 நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி

டெல்லியில் இன்று தொடங்கிய இன்டர்போல் அமைப்பின் 90-வது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் காசுகளை வெளியிட்டார்.

PM Modi unveils commemorative postal stamps and Rs 100 coins at the 90th Interpol General Assembly.
Author
First Published Oct 18, 2022, 4:18 PM IST

டெல்லியில் இன்று தொடங்கிய இன்டர்போல் அமைப்பின் 90-வது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் காசுகளை வெளியிட்டார்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்டர்போல் அமைப்பின் 90வது ஆண்டுக் கூட்டம் இன்று தொடங்கியது, இந்த கூட்டம் வரும் 21ம் தேதிவரை நடக்கிறது. 

இன்டர்போல் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், காவல்துறை தலைவர்கள், பல்வேறு நாடுகளின் மத்திய விசாரணை அமைப்பு, புலனாய்வு அமைப்பின் தலைவர்கள், மூத்த காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை கூடும் இன்டர்போல் கூட்டத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு: அனுமதி கொடுத்த உள்துறை அமைச்சகம்

PM Modi unveils commemorative postal stamps and Rs 100 coins at the 90th Interpol General Assembly.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்று, இன்டர்போலின் 90வ து ஆண்டையொட்டி அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் காசையும் வெளியிட்டார்.

இதற்கு முன் இந்தியாவில் கடந்த 1997ம் ஆண்டு இன்டர்போல் கூட்டம் நடந்தது, அதன்பின் 25 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் நடக்கிறது. இந்தியாவின் 75வது சுதந்திரத்தினம் கொண்டாடப்படும் தருணத்தில் இன்டர்போல் ஆண்டுக் கூட்டத்தையும் இந்தியாவில் நடத்த இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்ததையடுத்து, டெல்லியில் நடக்கிறது. 

இலங்கையில் அதிகரிக்கும் சீன ராணுவ நடமாட்டம்: அலறும் உளவுத்துறை! தமிழகஅரசு கலக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்டர்போல் தலைவர் அகமது நசீர் அல் ரெய்சாய், பொதுச்செயலாளர் ஜர்ஜென் ஸ்டாக், சிபிஐ இயக்குநர்ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது 

ஐக்கிய நாடுகளின் அமைதி பணிகளுக்குத் துணிச்சலான வீரர்களை அனுப்புவதில் இந்தியா முதன்மையான பங்களிப்பாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எங்களின் சொந்த சுதந்திரத்திற்கு முன்பே, உலகத்தை சிறந்த இடமாக மாற்ற தியாகங்களை செய்திருக்கிறோம். இந்திய காவல்துறை 900க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் 10,000 மாநில சட்டங்களை அமல்படுத்துகிறது.

கோதுமை, கடுகு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இன்டர்போல் ஒரு வரலாற்று மைல்கல்லை நெருங்குகிறது. 2023ம் ஆண்டு இன்டர்போல் தொடங்கப்பட்டு  100வது ஆண்டை கொண்டாட உள்ளது. உலகை சிறந்த இடமாக மாற்ற உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்பு இந்த விழாவாகத்தான் இருக்கும். ஐநா அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இந்தியா முதன்மையான பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கிறது

பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், உலகளவில் இந்தியா ஒரு உதாரணம். சட்ட கட்டமைப்பில் வேறுபாடுகள் இருந்தாலும் கடந்த 99 ஆண்டுகளில், இன்டர்போல், 195 நாடுகளில் உள்ள போலீஸ் அமைப்புகளை உலகளவில் இணைத்துள்ளது. 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios