Chinese Army in Sri Lanka: இலங்கையில் அதிகரிக்கும் சீன ராணுவ நடமாட்டம்: அலறும் உளவுத்துறை! தமிழகஅரசு கலக்கம்
இலங்கையில் சீனாவின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி(பிஎல்ஏ) நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்படலாம் என்று உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையால் தமிழக அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது
இலங்கையில் சீனாவின் பீப்பிள் லிபரேஷன் ஆர்மி(பிஎல்ஏ) நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு தொடர்பான அச்சம் ஏற்படலாம் என்று உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையால் தமிழக அரசின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரலாம் என்பதால், கடலோர ரோந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தமிழக அரசை எச்சரித்துள்ளது.
சீனாவின் பிஎல்ஏ ராணுவம் மற்றும் அதிநவீன எந்திரங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள், ட்ரோன்கள், உள்ளிட்ட அதிநவீன கண்காணிப்பு கருவிகளையும் இலங்கையின் வடபகுதியில் குவித்துள்ளது. ஆதலால் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும், என்று உளவுத்துறை அனைத்து மாவட்டங்களுக்கும், அரசுக்கும் அனுப்பியுள்ளது.
சீன ராணுவம், அதிநவீன எந்திரங்களுடன் கடலில் கடல்அட்டை விவசாயம் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதுமட்டுல்லாமல் இலங்கையைச் சேர்ந்த அரசில் கட்சித் தலைவர்களின் உதவியுடன் சீனாவைச் சேர்ந்தவர்கள் கடல்மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் கப்பலில், செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் மற்றும் கண்டம்விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, ஏவுகணைகளை கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளன.
இந்திய, அமெரிக்க எதிர்ப்பை மீறி இலங்கை வந்தடைந்தது சீன உளவுக் கப்பல் யுவான் வாங் 5
ஆதலால், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழு தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய உளவுத்துறையை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் அணுமின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றையும் கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியில் உள்ள முல்லைத்தீவு, பருத்திதீவு, ஆனலைத்தீவு, மீசாலை, சவகச்சேரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம், சீனர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரிய கலக்கம் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவின் வளமையான கடல்வளத்தை சீனர்கள் சேதப்படுத்தி, அழித்துவிடுவார்களோ என்று தமிழக மீனவர்கள் அச்சம் கொள்கிறார்கள்.
இலங்கையில் தற்போது நிலவும் சூழல் அங்கு வாழும் மக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி தீவு தேசத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீதான இந்தியாவின் செல்வாக்கைக் குறைத்துவிடும் என்ற தமிழர்களின் அச்சமாக இருக்கிறது.
இலங்கை வரும் சீன கப்பல்; தமிழ்நாட்டை வேவு பார்க்கிறதா? பதறும் இலங்கை!!
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம்தேதி சீனாவின் அதிநவீன ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகம் வந்தபோதே மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்த கப்பலில் செயற்கைக்கோளை கண்காணிக்கும் கருவி, கண்டம் விட்டு கண்டம் வாயும்ஏவுகணை, ஏவுகணைகளை ஏவும் வசதி என ஏராளமானவை உள்ளன. இந்த கப்பலின் வருகைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலைத் தெரிவித்து, அந்தக் கப்பலின் வருகை முதல் செல்வது அனைத்தையும் உன்னிப்பாக கண்காணித்தது.
தமிழக கடலோர காவல் பாதுகாப்பு டிஜிபி சந்தீப் மிட்டல் கூறுகையில் “ இலங்கையில் சீனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, விவாதத்துக்குரிய விஷயமல்ல. சீன தூதர் அடிக்கடி இலங்கைக்கு வருகிறார்கள். இலங்கையின் கடலோரப்பகுதி அதாவது சர்வதேச எல்லைக்கு உட்பட்ட பகுதிவரை ட்ரோன்கள் மூலம் ஆய்வு செய்து, கடலில் கடல்அட்டை வளர்க்க சர்வே செய்துள்ளனர்,இது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் இலங்கை மாணவர்கள் கல்வி பயில உதவித்தொகையை இந்தியா வழங்கும்போது, இலங்கை மாணவர்கள் உயர்கல்வி பயில தங்கள் நாட்டில் உதவித்தொகையை சீனா வழங்குகிறது.இதன் மூலம் தங்களின் எதிர்காலத் திட்டத்துக்காக இலங்கையின் இளைஞர்களை கவர்வதற்கான திட்டமாக இருக்கிறது.
3வது முறையாக அதிபரா? ஜி ஜின்பிங்கிற்கு சீனாவில் எதிர்ப்பு! பேனர் வைப்பு !
சீனர்கள் மட்டும்தான் இந்தியக் கடலில் ஊடுருவுவார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. யார் வேண்டுமானும் இந்த சூழலைபயன்படுத்தலாம், ஆதலால் தமிழக அரசும், கடலோரக் காவல் படையும்தீவிரமான கண்காணிப்புடன் இருக்க வேண்டும், ரோந்துப்பணியை அதிகப்படுத்தவேண்டும். அனைத்து கடலோர மாவட்டங்களையும் உஷார்படுத்த வேண்டும்”எ னத் தெரிவித்தார்
இதற்கிடையே கடலோரப் பாதுகாப்பான திட்டம்-2க்கான நிதி 2020ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆதலால், மத்திய அரசு உடனடியாக கடலோரக்காவல்படை திட்டம்-3 தொடங்கி நிதியை வழங்கிட வேண்டும், நிதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமிழகத்தில் கடலோர பாதுகாப்புப்படையில் 800 ஊழியர்கள் இருக்க வேண்டும், ஆனால், 50% இடங்கள் நிரப்பப்படாமல்உள்ளன. 42 கடலோர காவல்நிலையங்கள், சோதனைச் சாவடிகள் இருந்தும் அங்குகுறைந்த அளவில்தான் போலீஸார் உள்ளனர். ராமேஸ்வரம் அருகே, 240 ஏக்கர் பரப்பளவில், மண்டல கடற்படை பாதுகாப்பு அகாடெமியை தமிழக அரசு உருவாக்க இதுவரை மத்தியஅரசுஅனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Chinese Army
- Peoples Liberation Army
- Sri Lanka
- Tamil Nadu
- Tamil Nadu Coastal Security Group
- china investments in sri lanka
- china sri lanka
- china sri lanka news
- china sri lanka port
- chinese army in sri lanka
- chinese spy ship in sri lanka
- chinese spy ship reaches sri lanka
- chinese spy ship yuan wang-5 reaches sri lanka
- crisis in sri lanka
- sri lanka army
- sri lanka china
- sri lanka china news
- sri lanka crisis
- sri lanka economic crisis
- sri lanka economy
- sri lanka latest news
- sri lanka news
- Hambantota