Bilkis Bano case:பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு: அனுமதி கொடுத்த உள்துறை அமைச்சகம்

குஜராத்தில் கூட்டுப்பலாத்காரத்துக்கு ஆளாகிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் தண்டனை காலத்துக்கு முன்பே விடுவிக்கும் முடிவுக்கு சிபிஐ, விசாரணை நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Bilkis Bano case: CBI and Court opposed: The Centre has  cleard the release of convicts

குஜராத்தில் கூட்டுப்பலாத்காரத்துக்கு ஆளாகிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் தண்டனை காலத்துக்கு முன்பே விடுவிக்கும் முடிவுக்கு சிபிஐ, விசாரணை நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் மார்ச் 3-ம் தேதி ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானுவையும், அவரின் குடும்பத்தினர் 7 பேரையும் ஒரு கும்பல் தாக்கியது. 

அந்தத் தாக்குதல் நடந்த நேரத்தில் பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவரைத் தாக்கிய அந்த கும்பல் அவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் வைத்திருந்த இரண்டரை வயதுக் குழந்தை உள்ளிட்ட 7 பேரையும் அவர் கண்முன்னே கொலை செய்து அந்த கும்பல் தப்பி ஓடியது. 

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு; குஜராத், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!!

Bilkis Bano case: CBI and Court opposed: The Centre has  cleard the release of convicts

இந்த வழக்கில் 11 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த குற்றவாளிகளில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது நன்நடத்தை விதிப்படி ரத்து செய்து விடுதலை செய்யக் கோரினார். அதற்கு குற்றம் நடந்தது குஜராதத்தில், ஆதலால் குற்றவாளிகள் குறித்து குஜராத் அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் விடுதலையானவர்களில் சிலர் நல்ல பிராமணர்கள்: பாஜக எம்எல்ஏ சான்றிதழ்

இதையடுத்து,  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த அவர்களை நன்நடத்தை அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் குஜராத் அரசு விடுதலை செய்தது. குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலையாகினர்.

இந்த 11 பேரும் தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுவிக்கப்பட்டதற்கு   காங்கிரஸ் கட்சி, முஸ்லிம் அமைப்புகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Bilkis Bano case: CBI and Court opposed: The Centre has  cleard the release of convicts

குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ உறுப்பினர் சுபாஷினி அலி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மற்றொருவர் என 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி குஜராத் அரசு பிரமாணப்பத்திரத்தை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

குற்றவாளிகள் விடுதலையால் நீதித்துறை மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது: பில்கிஸ் பானு வேதனை

அதில் “ குற்றவாளிகள் 11 பேரை தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுவிக்க சிபிஐ, விசாரணை நீதிமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது நீதிமன்ற ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், குஜராத் அரசு மத்திய அரசிடம் 11 பேரை விடுவிப்பது தொடர்பாக கடிதம் அனுப்பிய அடுத்த 2 வாரங்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Bilkis Bano case: CBI and Court opposed: The Centre has  cleard the release of convicts

குற்றவாளிகள் 11 பேரும் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். சிறையில் இவர்கள் 11 பேரும் ஒழுக்கத்துடனும், நடத்தையிலும் எந்த குறைபாடும் இல்லை என குஜராத் அரசு மத்தியஅரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தை 2022,ஜூன் 28ம்தேதி குஜராத் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியது. கடிதம் எழுதப்பட்ட தேதியிலிருந்து இரு வாரங்களில், அதாவதுஜூலை 11ம் தேதி 11 பேரையும் சிஆர்பிசி 435 பரிவின் கீழ் முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது என நீதிமன்ற ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

பில்கிஸ் பானு வழக்கு: முரண்படும் பாஜக: மத்தியில் ஒருவிதம் குஜராத்தில் வேறுவிதம்

ஆனால், 11 பேரையும் தண்டனைக் காலத்துக்கு முன்கூட்டியே விடுவிக்க சிபிஐ அமைப்பும், சிறப்பு விசாரணை நீதிமன்றமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக சிபிஐ அமைப்பு கடந்த ஆண்டு கோத்ரா கிளைச்சிறை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் “ குற்றவாளிகள் 11பேரும் கொடூரமான, இரக்கமற்ற, தீவிரமான குற்றத்தை செய்தவர்கள். அவர்களை தண்டனைக் காலத்துக்கு முன்பே விடுவிக்க கூடாது அவர்களுக்கு கருணை காட்டக்கூடாது” எனத் தெரிவித்துள்ளது.

சிறப்பு நீதிமன்றம் தெரிவித்த கருத்தில் “ குற்றவாளிகள் 11 பேரும் பாதிக்கப்பட்டவரின் மதத்தை அடிப்படையாக வைத்து குற்றம் செய்துள்ளனர், இந்த செயலில் பச்சிளம் குழந்தையைக் கூட விட்டுவைக்கவில்லை. இவர்களை முன்கூட்டியே விடுவிக்ககூடாது” எனத் தெரிவித்திருந்தது  என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios