MSP Hike:Minimum support price:Rabi cropகோதுமை, கடுகு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கோதுமை மற்றும் கடுகிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளி்த்தது.

Wheat and mustard MSP increases agreed by the government: CCEA

கோதுமை மற்றும் கடுகிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளி்த்தது.

இதன்டி, கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.125 உயர்த்தப்பட்டு, ரூ.2,125 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடுகு குவிண்டால் ஒன்றுக்கு 400 ரூபாய் உயர்த்தப்பட்டு, ரூ.5,450 ஆகஅதிகரிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் காந்திநகரில் நாளை பாதுகாப்பு துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

கடுகு, கோதுமை உற்பத்தியை இந்த ஆண்டு அதிகப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த முடிவு பிரதமர் மோடிதலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை எடுத்தது.

Wheat and mustard MSP increases agreed by the government: CCEA

விவசாயிகளிடம் இருந்து தானியங்களைஅரசு கொள்முதல் செய்யும்போது வழங்கப்படும் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையாகும். தற்போது ராபி, கரீப் பருவத்தில் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு முடிவு செய்துள்ளது.

குளிர்கால விதைப்பான ராபி பருவம் அக்டோபரில் தொடங்கும் இந்த அறுவடை முடிந்தவுடன், கரீப் பருவம் தொடங்கும் இதில் கோதுமை, கடுகு பெரும்பாலும் பயிரிடப்படும். 

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 41 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டனர்: ஐ.நா. அறிக்கை

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை வெளியிட்ட அறிவிப்பில் “ 2022-23ம் ஆண்டு ராபி பருவத்தில்(ஜூலை-ஜூன்) 6 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டு ரூ2,125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015 வழங்கப்பட்டது. கோதுமை பயிரிடுவதற்கான செலவு ரூ.1,065 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமைக்கு அதிகபட்சமாக 5.46 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு குவிண்டால் ரூ.2,125 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை 8 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.5450ஆகவும், மசூர் பருப்பு வகை விலை 9 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, குவிண்டால் ரூ.6ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios