Asianet News TamilAsianet News Tamil

Defence Expo 2022: குஜராத் காந்திநகரில் நாளை பாதுகாப்பு துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

குஜராத்தின் காந்தி நகரில் நாளை(19ம்தேதி) பாதுகாப்புத்துறை கண்காட்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி மூலம் ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க மத்திய அ ரசு திட்டமிட்டுள்ளது.

Defence Expo 2022: PM Modi will inaugurate Defence Expo and introduce development initiatives in Gandhinagar. .
Author
First Published Oct 18, 2022, 12:56 PM IST

குஜராத்தின் காந்தி நகரில் நாளை(19ம்தேதி) பாதுகாப்புத்துறை கண்காட்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி மூலம் ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க மத்திய அ ரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கண்காட்சி திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி இருநாட்கள் குஜராத் பயணம் மேற்கொள்கிறார். அதுமட்டுமல்லாமல், ரூ.15,670 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைவிட, பிரம்மாண்டமான முறையில், பாதுகாப்புத்துறை கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. ஏறக்குறைய 400 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பில்கிஸ் பானு வழக்கு:குற்றவாளிகளை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு: அனுமதி கொடுத்த உள்துறை அமைச்சகம்

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

குஜராத்தின் காந்தி நகரில், பாதுகாப்புத்துறையின் கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை(19ம்தேதி) குஜராத் செல்ல உள்ளார். முதல்முறையாக இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்படும் இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து நடத்தும் நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் 41 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீண்டனர்: ஐ.நா. அறிக்கை

இந்த கண்காட்சியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் தயாரித்த ஹெச்டிடி-40 ரக பயிற்சி விமானம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த விமானம் பயிற்சி பைலட்களுக்கு உதவியாகவும், அவர்களுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்கள் மூலம் விண்வெளியில் பாதுகாப்புப் படைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கும் நோக்கத்துடன் 'மிஷன் டெஃப்ஸ்பேஸ்' ஐ அவர் தொடங்கப்பட உள்ளது. குஜராத்தில் தீசா விமானநிலையத்துக்கும் பிரதமர் மோடி  அடிக்கல் நாட்ட உள்ளார்.

அடல்ஜியில் “மிஷன் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ்” திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, ஜூனாகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதன்பின் ராஜ்கோட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார், அதன்பின் மாலையில், புத்தாக்க முறையில் கட்டுமானங்களை கட்டுவது குறித்த கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

வருஷத்துக்கு 2 சிலிண்டர்கள் இலவசம்... மக்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்த குஜராத் அரசு!!

வியாழக்கிழமை, கேவாடியா நகரில் நடக்கும் “மிஷன் லைப்” திட்டத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, 10வது “ஹெட்ஸ் ஆப் மிஷன்” மாநாட்டில் பங்கேற்கிறார். வயாரா நகரில் பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடிஅடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த பாதுகாப்புத்துறை கண்காட்சியின்போது, இந்தியா-ஆப்ரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு எனு தலைப்பில் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் பேச்சு நடக்கிறது. 2வது “இந்தியன் ஓசன் பிளஸ் கன்க்ளேவ்” நடக்கிறது

அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக பாதுகாப்புத் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடும் இங்கு ஒருசேர நடத்தப்பட உள்ளது. இதில் ஏறக்குறைய 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை, 451 பாட்னர்ஷிப்புடன் இணைந்து காட்சிப்படுத்துகிறார்கள்

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது
 

Follow Us:
Download App:
  • android
  • ios