Asianet News TamilAsianet News Tamil

பரிக்‌ஷா பே சார்ச்சா 2024: மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்

PM modi to hold Pariksha Pe Charcha with students teachers and parents smp
Author
First Published Jan 29, 2024, 11:45 AM IST

பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு முதல் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, தேர்வு நேரத்தில் அனைவரிடமும் எழும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி அணுகுவது, அவற்றை எப்படி களைவது என்பன குறித்து அறிவுரை வழங்கி வருகிறார். ஆண்டுதோறும் பல லட்சம் பள்ளி மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி 7ஆவது ஆண்டாக இன்று நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 4,000 மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 2.05 கோடி மாணவர்கள், 14.93 லட்சம் ஆசிரியர்கள், 5.69 பெற்றோர்கள் பதிவு செய்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

 

 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. 500 வார்த்தைகளுக்கு மிகாமல் தங்களது கேள்விகளை பிரதமர் மோடிக்கு அனுப்ப வேண்டும். அந்த கேள்விகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

பீகாருக்குள் இன்று நுழையும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் பிரதமருடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரதமரின் எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகம் மற்றும் சான்றிதழும் உட்பட பரிக்ஷா பே சர்ச்சா கிட் பரிசாக வழங்கப்படும்.

பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி, ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

"என் வார்த்தையை குறிச்சு வச்சுக்கோங்க..” நிதிஷ்குமார் கூட்டணி மாற்றம் குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து..

Follow Us:
Download App:
  • android
  • ios