Asianet News TamilAsianet News Tamil

"என் வார்த்தையை குறிச்சு வச்சுக்கோங்க..” நிதிஷ்குமார் கூட்டணி மாற்றம் குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து..

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமார் மீண்டும் கூட்டணி மாற்றியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Mark my my words politicalstrategist prashant kishore on nithish kumar goes back to bjp Rya
Author
First Published Jan 29, 2024, 8:44 AM IST

பீகார் முதலமைச்சராக 9-வது முறையாக முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். மீண்டும் ஒருமுறை கூட்டணியை மாற்றிக்கொண்டுள்ள அவர் தற்போது பாஜக ஆதரவுடன் முதலமைச்சராகி உள்ளார். அவர், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்து விரைவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கடந்த ஒரு வாரமாகவே தகவல்கள் வெளியான நிலையில் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 

இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த நிலையில் நேற்று மாலை நடந்த பதவியேற்பு விழாவில் 9-வது முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நிதிஷ்குமாருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ராமர் கோவில்.. நிதிஷ் குமார்.. அடுத்து நடக்கப்போவது இதுதான்? இந்தியா கூட்டணிக்கு விபூதி அடிக்கும் பாஜக..!

இந்த நிலையில் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமார் மீண்டும் கூட்டணி மாற்றியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பீகாரில் உருவாக்கப்பட்ட ஜனதா தளம் (ஐக்கிய) - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்று கூறினார்.

மேலும் “ புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டணி 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல் வரை நீடிக்காது, அதாவது ஜேடி(யு)-பாஜக கூட்டணி ஓராண்டு அல்லது அதற்கும் குறைவாகவே ஆட்சியில் இருக்கும். தற்போது நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முகமாகவும், பாஜகவின் ஆதரவைக் கொண்டவராகவும் இருக்கிறார், (பீகார்) சட்டமன்றத் தேர்தல் வரை இது இருக்காது. இதை நான் எழுத்துப்பூர்வமாகத் தருகிறேன்" என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

நிதிஷ்குமார் தனது கூட்டணியை மாற்றுவது இது முதன்முறையல்ல. 2020-ம் ஆண்டு பீகாரில் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக உடன் இணைந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். 
பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு இந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் ஆட்சி அமைத்தார். தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக இருந்து வந்தார். 

இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறியபோது, பீகாரில் அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் என நம்புவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். பீகார் மக்களின் ஆசைகளையும், கனவுகளையும் அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்" என்று  பிரசாந்த் கிஷோர் அப்போது கூறியிருந்தார்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை: யுஜிசி விளக்கம்

முன்னதாக கூட்டணி மாற்றம் குறித்து பேசிய நிதிஷ்குமார் “ மகாகத்பந்தன் கூட்டணியின் எதுவும் சரியாக நடக்கவில்லை. கட்சி தொண்டர்களின் ஆதரவை கேட்டு இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதனிடையே மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முக்கிய பங்கு வகித்தது. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டமே நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்றது.

ஆனால் இந்தியா கூட்டணி – நிதிஷ்குமார் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்தியா கூட்டணி தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று கூறி பாஜகவுடன் கை கோர்த்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்த மம்தாவும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது நிதிஷ்குமாரும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளது இந்தியா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios