உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து பெருமை கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் பட்ஜெட் தாக்கல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பிரத்தியேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக பெரும் பெரும்பான்மையுடன் நிச்சயம் வெற்றி பெறும் என கூறியதோடு, மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு குறித்தும் பேசினார். முதலமைச்சராக பணியாற்றி உள்ளதால் மாநிலங்களின் தேவையை சரிவர அறிந்து அதற்காக செயலாற்றுகிறேன் எனப் பேசிய பிரதமர் மோடி, மாநிலங்களை ஊக்குவிக்கவே வெளிநாட்டு தலைவர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார்.

சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினருக்குமான திட்டங்களை திட்டுகிறோம் எனவும், நாட்டைத் துண்டாட நினைக்கும் எதிர்க்கட்சிகளின் சதியில் மக்கள் சிக்க மாட்டார்கள் என்றார். நான் விவசாயிகளின் இதயங்களை வெல்வதற்காக வந்துள்ளேன், அதை செய்தேன் என பேசிய பிரதமர் மோடி, சிறு விவசாயிகளின் வலி எனக்கு புரிகிறது எனவும், விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக அமல்படுத்தப்பட்டதாகவும் ஆனால் தேசிய நலன் கருதி அவை திரும்பப் பெறப்பட்டதாகவும் நான் கூறியிருந்தேன் என்றார். ஊழல் வழக்குகளில் தேசிய சொத்துக்களை மீட்டெடுக்கும் புலனாய்வு அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக மற்றும் யோகி ஆதித்யநாத் ஆட்சி குறித்து பேசிய பிரதமர், இன்று பெண்கள் இருட்டிய பிறகும் வெளியே செல்லலாம் என்று கூறுகிறார்கள். இந்த நம்பிக்கை பாதுகாப்புக்கு அவசியம். உ.பி.யில் ஒரு காலத்தில் குண்டர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், இன்று அவர்கள் சரணடைகின்றனர். யோகி ஜி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அதில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார். கடந்த ஆண்டுகளைப் போலவே வரும் தேர்தலில் உபி மக்கள் பாஜகவை நம்பி வாக்களிப்பார்கள் எனவும் பிரதமர் கூறினார். சீன அதிபரை தமிழ்நாட்டுக்கும் பிரான்ஸ் அடிப்படை உத்திரப் பிரதேச மாநிலத்திற்கும் அழைத்துச் சென்றோம் என்பதை சுட்டிக் காட்டிய அவர் , உலகின் மிக மூத்த மொழியாக தமிழ் திகழ்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.