இதுதான் உண்மையான சமூக நீதி, மதச்சார்பின்மை: பிரதமர் மோடி எதைச் சொல்றாருன்னு பாருங்க!!
வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்த இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை முதல் கவுகாத்தி மற்றும் ஜல்பைகுரி இடையே இயக்கப்படும். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் ரயில் இணைப்புக்கான ஒரு முக்கிய நாள் இன்று. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். இது மாநிலத்தின் சுற்றுலாத் துறையையும் மேம்படுத்தும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வடகிழக்கில் சுற்றுலா, கல்வி, வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
வடகிழக்கு மாநிலங்கள் இணைப்பு தொடர்பான மூன்று பணிகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு இந்தியா தனது முதல் வந்தே பாரத்தைப் பெறுகிறது. மேற்கு வங்கத்தை இணைக்கும் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவாகும். அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் சுமார் 425 கிமீ பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஏழை வீடுகள் முதல் பெண்களுக்கான கழிவறைகள் வரை, குடிநீர் குழாய் முதல் மின்சார இணைப்பு வரை, எரிவாயு குழாய் முதல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வரை, சாலை, ரயில், நீர்வழிகள், துறைமுகம், விமான நிலையம், மொபைல் இணைப்பு என முழு அளவில் பணியாற்றியுள்ளோம். உள்கட்டமைப்பு அனைவருக்கும் சமமாக, பாகுபாடு இல்லாமல் கிடைக்கிறது. எனவே இந்த உள்கட்டமைப்பு கட்டடம் ஒரு வகையில் உண்மையான சமூக நீதி, உண்மையான மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
டெல்லியில் சிறுமியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்! வெறித்தனமான தாக்குதலை வேடிக்கை பார்த்த மக்கள்!
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு பணிகள் குறித்து இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஏனெனில் இந்த உள்கட்டமைப்புகள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. விரைவான வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. ஏழைகள், தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், அனைவருக்கும் அதிகாரம் அளிக்கிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டால் யாரேனும் அதிகப் பயனடைந்திருக்கிறார்கள் என்றால் அது கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாதான்.
வடகிழக்கில் கடந்த கால தோல்விகளை மறைக்க பல வேலைகள் செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். வடகிழக்கு மக்களை பல தசாப்தங்களாக அடிப்படை வசதிகளுக்காக காத்திருக்க வைத்தனர். மன்னிக்க முடியாத இந்த குற்றத்தில், வடகிழக்கு மாநிலங்கள் நிறைய இழந்துள்ளன" என்று மோடி கூறினார்.