PM Modi on DMK: ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி
356வது சட்டப்பிரிவு மூலம் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் திமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
“மத்திய அரசு மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், முதலமைச்சராக இருந்த எனக்கு உண்மையான கூட்டாட்சி என்றால் என்னவென்று தெரியும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது சட்டப்பிரிவை காங்கிரஸ் கட்சிதான் அதிகம் பயன்படுத்தியது. காங்கிரஸ் கட்சி 356வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை 90 முறை கவிழ்த்திருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
Nehru Gandhi family: நேரு பெயரை வைத்துக் கொள்வதில் வெட்கம் ஏன்?: பிரதமர் மோடி கேள்வி
மேலும், “இந்திரா காந்தி மட்டும் 356வது சட்டப்பிரிவை 50 முறை பயன்படுத்தினார். கேரளாவில் அமைந்த காங்கிரஸ் அரசாங்கம் தனக்குப் பிடிக்காததால் 356வது சட்டப்பிரிவைக் கையாண்டு அந்த ஆட்சியைக் கலைத்தவர்தான் நேரு” என்று நாடினார்.
தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்களின் ஆட்சியைக் கவிழ்த்தது காங்கிரஸ் கட்சி என்றும் குறிப்பிட்ட பிரதமர், தங்கள் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்தவர்களுடனே திமுக இன்னும் கூட்டணி வைத்துக்கொண்டு இருக்கிறது என்றும் விமர்சித்தார்.
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எழுப்பிய கடும் கண்டன கோஷங்களுக்கு நடுவே பிரதமர் உரையாற்றினார். இதனால் தனது உரையில், சபையில் சிலரின் நடத்தை ஏமாற்றம் அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
LPG Price: எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்