Nehru Gandhi family: நேரு பெயரை வைத்துக் கொள்வதில் வெட்கம் ஏன்?: பிரதமர் மோடி கேள்வி
மாநிலங்களைவையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகச் சாடிய பிரதமர் நரேந்திர மோடி, நேரு குடும்பப் பெயரை வைத்துக்கொள்வதற்கு அவர்கள் அவமானப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியதால், பிரதமர் உரையை நிறுத்தினார். ராஜ்யசபா தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, சபையில் சிலரின் நடத்தை ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்து பேச்சைத் தொடர்ந்தார்.
முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், “நேரு குடும்பப்பெயரை வைத்துக்கொள்வதில் ஏன் வெட்கப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
LPG Price: எல்பிஜி சிலிண்டர் விலை எப்போது குறையும்? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்
“எங்கள் திட்டங்களுக்கான பெயர்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமஸ்கிருத வார்த்தைகளின் பயன்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன” என்று கூறிய பிரதமர், “காங்கிரஸ் காலத்தில் 600க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டது. எந்த நிகழ்ச்சியிலும் நேருவின் பெயர் வரவில்லை.
நேருவின் தலைமுறைக்குப் பிறகு இவர்கள் ஏன் நேரு குடும்பப் பெயரை வைக்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். நேரு அவ்வளவு உயர்ந்த தலைவராக இருந்தால், நேரு என்ற குடும்பப் பெயரை வைத்துக்கொள்வதில் என்ன அவமானம்? இந்த நாடு எந்த குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல.” என்றும் கூறினார்.
கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி அமைந்தபோது அதனை விரும்பாமல் ஆட்சியைக் கலைத்தவர்தான் நேரு என்றும் பிரதமர் சாடினார். “நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும்” என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
ஹிண்டன்ப்ர்க் நிறுவன அறிக்கை மீது விசாரணை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை