10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர்: பிரதமர் மோடி பெருமிதம்
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் பணக்காரர்களாக மாறியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு சேவையை செய்ய மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் இதனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாவும் மோடி கூறினார்.
செவ்வாயக்கிழமை, மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஐம்பது வருடங்களாக வறுமை ஒழிப்பு முழக்கங்களைக் கூறிகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். திட்டங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தப்பட்டதால்இந்த மாற்றம் நிகழ்கிறது" என்றார்.
ஆளுநர் - மாநில அரசு மோதல் போக்கால் மக்களுக்கே பாதிப்பு: உச்ச நீதிமன்றம்
"களத்தில் இறங்கி, அதன் யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள், மாற்றத்தைக் கொண்டு வருகிறார்கள். ஏழைகளுக்கு வெற்று முழக்கங்களை மட்டும் நாங்கள் வழங்கவில்லை; உண்மையான வளர்ச்சியை வழங்கினோம். ஏழைகளின் வாழ்க்கைப் போராட்டங்கள், சாமானியர்களின் கஷ்டங்கள், நடுத்தர வர்க்கத்தின் சவால்களைப் புரிந்துகொள்வதற்கு உண்மையான அர்ப்பணிப்பு தேவை. துரதிர்ஷ்டவசமாக, சிலருக்கு அது இல்லை" என்று மோடி கூறினார்.
"2002 ஆம் ஆண்டில், ரூ.2 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை; இப்போது ரூ.12 லட்சம் வரை வருமானத்திற்கு வருமான வரி இல்லை. முன்னர், செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பானவையாக இருந்தன. 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது, கோடிக்கணக்கான மக்களின் ரூபாய் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவை பொதுமக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாங்கள் நிறைய பணத்தை மிச்சப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஆனால் அந்தப் பணத்தை 'மஹால்' கட்டுவதற்குப் பயன்படுத்தவில்லை. மாறாக அந்தப் பணத்தை தேசத்தைக் கட்டமைக்க பயன்படுத்தியுள்ளோம்" என்றும் மோடி சொன்னார்.
"இந்தியாவில் பிறக்காத சுமார் 10 கோடி பேர் மோசடிகள் செய்து பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் நிதிப் பலன்களைப் பெற்றனர். அத்தகைய மோசடியில் ஈடுபட்ட 10 கோடி பேரின் பெயர்களை நாங்கள் நீக்கியுள்ளோம். அந்தப் பணத்தை உண்மையான பயனாளிகளுக்கு வழங்கி இருக்கிறோம்" என்று மோடி தெரிவித்தார்.
"ஒரு பெண் திறந்தவெளியில் மலம் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னரோ மட்டுமே அவர் வெளியே வர முடியும். சிலர் இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள். 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகளைக் கட்டியதன் மூலம், எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் போராட்டங்களைப் போக்கியிருக்கிறோம்" என்றார்.
"எங்கள் முன்னுரிமை ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் சென்றடைவதை உறுதி செய்வதாகும். கிட்டத்தட்ட 75% வீடுகளில் - சுமார் 16 கோடி வீடுகளில் - குழாய் நீர் இணைப்பு இல்லை. எங்கள் அரசாங்கம் 12 கோடி வீடுகளுக்கு குழாய் நீரை வழங்கியுள்ளது. இந்த சாதனையை குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார். பொழுதுபோக்குக்காக மட்டும் ஏழைச் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்பவர்களால் நிச்சயமாக ஏழைகளின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியாது" என்றும் அவர் கூறினார்.
பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: அஸ்வினி வைஸ்ணவ் தகவல்