மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; இந்தியாவில் AI புரட்சிக்கு வித்தா?

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியாவில் AI தொழில்நுட்ப முதலீடு குறித்து விவாதித்தார். இருவரும் தொழில்நுட்பம், புதுமை மற்றும் AI-யின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.

PM Modi met Microsoft CEO Satya Nadella discussed AI innovation in India

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்த நிகழ்வை தனக்கு மன நிறைவாக இருந்தது என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பேசி இருந்தார். தெலுங்கானாவில் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவில் முதலீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இது தொடர்பாக நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் AI தொழிநுட்பத்தில் முதலீடு செய்வது தொடர்பாக முக்கியமாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்புக்குப் பின்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் சத்யா நாதெல்லா, ''உங்கள் தலைமைக்கு நன்றி பிரதமர்மோடிஜி. இந்தியாவில் முதலில் AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த AI தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் பலன்களை உறுதி செய்வதற்காக நாட்டில் எங்களது தொடர்ச்சியான விரிவாக்கத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று பிரதமருடனான சந்திப்பின் புகைப் படத்தைப் பகிர்ந்துள்ளார். 

உஷார்..! ஏஐ Chatbots உடன் கேட்கக்கூடாத 7 கேள்விகள்.! இல்லைனா அவ்ளோதான்

இதற்கு பதிலளித்து இருக்கும் பிரதமர் மோடியும், ''உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்தியாவில் மைக்ரோசாப்டின் விரிவாக்கம் மற்றும் முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. எங்கள் சந்திப்பில் தொழில்நுட்பம், புதுமை மற்றும் AI ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்ததும் மிகவும் நன்றாக இருந்தது'' என்று பதிவிட்டுள்ளார்.

Vijayakanth : GOAT படம் மட்டுமல்ல.. இன்னொரு படத்திலும் AI மூலம் இணையும் "கேப்டன்" - யார் படம் தெரியுமா?

கடந்த 2013 ஆம் ஆண்டில் இந்தியாவில் பிரதமர் மோடியை சத்யா நாதெல்லா சந்தித்து இருந்தார். இதன் பின்னர் தான் டிஜிட்டல் இந்தியா என்ற தலைப்பை மோடி அரசு முன்னெடுத்து இருந்தது. அப்போதும், டிஜிட்டல் மூலம் பண பரிவர்த்தனை செய்வது ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இந்தியாவுக்கு இந்த துறையில் அனைத்து வகையிலும் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று சத்யா நாதெல்லா பதிவிட்டு இருந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios