உஷார்..! ஏஐ Chatbots உடன் கேட்கக்கூடாத 7 கேள்விகள்.! இல்லைனா அவ்ளோதான்
ஏஐ சாட்பாட்களில் தற்போது நண்பர்கள் போல அனைவரும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏஐ டெக்னலாஜியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் சில விஷயங்களை AI உடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் அது ஆபத்தானது. அவை என்னவென்று பார்ப்போம்.
AI Chatbot Security Tips
ஏஐ (AI) என்பது முக்கிய துறைகளில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம். இது பயனுள்ளதாக இருந்தாலும் தவறாகப் பயன்படுத்தினால் தீங்கு விளைவிக்கும். ஏஐ அரட்டைப் பக்கங்கள் அதாவது சாட்பாட்ஸ் உதவிகரமாகத் தோன்றினாலும், சுகாதார ஆலோசனை போன்ற முக்கியமான விஷயங்களுக்கு அவற்றை நம்ப வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். Chat GPT மற்றும் பிற AI உடன் பகிரக்கூடாத/கேட்கக்கூடாத 7 விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
AI Chatbot Privacy Concerns
1. பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட விவரங்களை AI சாட்பாட் உடன் பகிர வேண்டாம். மோசடி செய்பவர்கள் இந்தத் தகவலை உங்களை அடையாளம் கண்டு கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.
2. வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, ஆதார் அல்லது பான் கார்டு எண்களை ஒருபோதும் பகிர வேண்டாம். மோசடி செய்பவர்கள் உங்கள் பணம் அல்லது அடையாளத்தைத் திருட இவற்றைப் பயன்படுத்தலாம்.
Avoid Sharing Personal Information with AI Chatbots
3. கடவுச்சொற்களை AI சாட்பாட் உடன் பகிர்வதைத் தவிர்க்கவும். சிறந்த சேவையை வழங்க AI உங்கள் வலைத்தளக் கணக்குகளை அணுகலாம் என்றாலும், இந்த வசதி எதிர்கால சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
4. அதேபோல ஏஐ சாட்பாட்ஸ் நல்லதாக இருக்கிறது என்று தோன்றினாலும், ரகசியங்களைப் பகிர வேண்டாம். Chat GPT போன்ற அரட்டைப் பக்கங்கள் மனித உரையாடல் மற்றும் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க முடியும். ஆனால் அவை மனிதர்கள் அல்ல. உங்கள் தகவல் பதிவு செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இலவச இன்டர்நெட் தரும் BSNL.. டிசம்பர் 31 கடைசி தேதி.. சீக்கிரம் முந்துங்க பாஸ்
AI Chatbots
5. AI செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் மருத்துவர்களைப் போல உங்களுக்கு அறிவுரை வழங்கலாம். ஆனால் உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை அங்கு கூற வேண்டும்.சாட்பாட்ஸ்களிடம் சிகிச்சை அல்லது மருந்துகள் பற்றி கேட்பதைத் தவிர்க்கவும். காப்பீட்டு எண்கள் அல்லது சுகாதார விவரங்களைப் பகிர வேண்டாம்.
6. சாட்பாட்ஸ்கள் உங்கள் தகவலின் அடிப்படையில் விவரங்களை வழங்குகின்றன. தகவல் இணையத்தில் வந்தவுடன், அது உண்மையில் ஒருபோதும் நீக்கப்படாது. நீக்கிய பிறகும் அது எங்காவது நீடிக்கும் என்று டெக் நிபுணர்கள் கூறுகின்றனர்.
Data Security and AI Chatbots
7. செயற்கை நுண்ணறிவு ஏஐ சாட்பாட்கள் உங்கள் உரையாடல்களைச் சேமித்துப் பகிரலாம். நீங்கள் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் எதையும் அவர்களிடம் சொல்வதைத் தவிர்க்கவும்.
யுபிஐ, கேஸ் முதல் பிஎஃப் வரை; ஜனவரி முதல் புதிய மாற்றங்கள் - முழு விபரம்