- Home
- Gallery
- Vijayakanth : GOAT படம் மட்டுமல்ல.. இன்னொரு படத்திலும் AI மூலம் இணையும் "கேப்டன்" - யார் படம் தெரியுமா?
Vijayakanth : GOAT படம் மட்டுமல்ல.. இன்னொரு படத்திலும் AI மூலம் இணையும் "கேப்டன்" - யார் படம் தெரியுமா?
Captain Vijayakanth : மறைந்த பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் GOAT படத்தில் நடிக்கவைத்துள்ளது அனைவரும் அறிந்ததே.

vijay goat
என்னதான் தொழில்நுட்பங்கள் நம்மை பயமுறுத்தும் வண்ணம் இருந்தாலும், பல சமயங்களில் அந்த தொழில்நுட்பத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி மன்மடங்கு பெரியது என்பதை விரைவில் நிரூபிக்க உள்ளது கோட் திரைப்படம்.
Vijayakanth
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக காலமானார். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவின் மாபெரும் இழப்பாக பார்க்கப்பட்டது.
GOAT Vijayakanth
இந்த சூழலில் தற்பொழுது தளபதி விஜய் நடித்து வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் சுமார் 10 நிமிடம் ஓடும் காட்சியில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் படக்குழு திரைப்படத்தில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Padai Thalaivan
இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுடைய இளைய மகன் சண்முக பாண்டியன், தற்போது நடித்துவரும் "படைத்தலைவன்" என்கின்ற திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்கள் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்ற நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் அவர்களை AI தொழில்நுட்பம் மூலம் இந்த திரைப்படத்தில் கொண்டு வர தற்பொழுது பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.