மனதின் குரல் எனும் பெயரில் பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலி மூலம் உரையாற்றி வரும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று 68வது முறையாக உரையாற்றினார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற  பிரதமர் நரேந்திர மோடி,  மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்றைய உரையில் அவர் பேசிய முக்கிய விஷயங்கள் பின்வருமாறு, 

  • இயற்கையை காப்பதற்காகவே விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது. விழாக்கள் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் உணர்வை வளர்க்கும். 
  • பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா உலகின் உற்பத்தி மையமாக மாறி வருகிறது. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள் தான். 
  • குழந்தைகளின் படைப்பற்றாலை வெளிக்கொணரும் சிறந்த பொம்மைகளை உருவாக்க வேண்டும். புதிய கல்விக்கொள்ளையில் விளையாட்டுக்களை கொண்டே கற்றல், விளையாட்டு பொம்மை தயாரிப்பதை கற்றல், விளையாட்டுப் பொருட்கள் செய்யும் இடங்களுக்கு செல்லுதல் ஆகிய பாடத்திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 
  • உலக அளவில் பொம்மை தயாரிப்பு தொழில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. அதில் இந்தியாவின்  பங்கு மிகச்சிறியது. முழு உலகிற்கும் பொம்மை தயாரிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. புதிய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து பொம்மைகளை தயாரிக்க வேண்டும். 
  • கொரோனா அச்சுறுத்தல் காலம் இது 5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது 
  • ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவை. அவற்றை பராமரிக்கும் செலவும் குறைவு என்பதால் மக்கள் இந்திய வகை நாய்களை வீடுகளில் அதிகம் வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.