இனி 6 மணி நேரத்தில் பெங்களூருவில் இருந்து கோவை செல்லலாம்.. புதிய வந்தே பாரத் ரயில் தொடக்கம்.. விவரம் உள்ளே..
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவைகளில் பெங்களூரு-கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்றுள்ளார். அவரின் இந்த பயணத்தில் ரூ.15,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தரம் உயர்த்தப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை திறந்து வைத்த அவர், 6 வந்தே பாரத், 2 அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் திட்டங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவைகளில் பெங்களூரு-கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும். இதன் மூலம் பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் இடையே பயண நேரம் 7.30 மணி நேரத்தில் இருந்து சுமார் 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூரு - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பூர், ஈரோடு, தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த ரயிலின் அட்டவணை மற்றும் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இது பெங்களூருவிற்கு நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாகும். மேலும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே இரண்டாவது ரயில் ஆகும்.
கோயம்புத்தூர்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரம் மற்றும் பாதை
தென்மேற்கு ரயில்வேயின் கூற்றுப்படி, இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும், ஓமலூர் (காலை 7:40), தருமபுரி (காலை 8:30), ஓசூர் (காலை 10:05), காலை 11:30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் சென்றடையும். இந்த மறுவடிவமைக்கப்பட்ட நிலையத்திலிருந்து இயக்கப்படும் முதல் ரயில், 2025 இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலை தவிர, அயோத்தி-ஆனந்த் விஹார், புது தில்லி- எஸ்எம்விடி கத்ரா, புது தில்லி-அமிர்தசரஸ் மற்றும் மும்பை-ஜல்னா. புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் இருந்து தார்வாட், பெலகாவி, ஹுப்பள்ளி, சென்னை, மைசூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. பெங்களூரு - தார்வாட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சமீபத்தில் இந்திய ரயில்வேயால் பெலகாவி வரை நீட்டிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை மைசூரு-சென்னை இடையே பெங்களூரு வழியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.