அயோத்தில் பிரதமர் : 6 வந்தே பாரத், 2 அம்ரித் பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி 6 வந்தே பாரத், 2 அம்ரித் பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

PM Modi Ayodhya Visit Today PM flags off 6 Vande Bharat, 2 Amrit Bharat trains Rya

8 புதிய ரயில்கள் உட்பட நாட்டிற்கான பல மெகா திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்குச் செல்ல உள்ளார். அதன்படி இந்த நிலையில் அயோத்தி சென்றுள்ள பிரதமர் மோடி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்தி பென் படேல் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ரயில் நிலையம் வரை வாகன பேரணி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி காரின் கதவுகளை திறந்து நின்றவாறு கையசைத்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து ரூ.240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 6 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 2 அமிர்த பாரத் ரயில்கள் என மொத்தம் 8 புதிய ரயில்களை மோடி தொடங்கி வைத்தார். 

 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் இயங்கி வருகிறது. அதே நேரத்தில் அம்ரித் பாரத் என்பது சாமானியர்களின் வசதிகள் மற்றும் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதிய ரயிலாகும். அம்ரித் பாரத் ரயில்கள் குளிரூட்டப்படாத இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் இருக்கும். இந்த ரயில்கள் 130 கிமீ வேகத்தில் புஷ்-புல் தொழில்நுட்பத்தில் இயங்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்த 8 புதிய ரயில்கள் மற்றும் அவற்றின் வழித்தடங்கள் மற்றும் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடங்கள் ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதைகள்

  • ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • அமிர்தசரஸ் - டெல்லி சந்திப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • கோவை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • ஜல்னா - மும்பை (CSMT) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • அயோத்தி - ஆனந்த் விஹார் டெர்மினல் டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
  • மங்களூரு - மட்கான் கோவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதைகள்

  • தர்பங்கா முதல் டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை செல்லும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்
  • மால்டா டவுன் முதல் பெங்களூரு (சர் எம். விஸ்வேஸ்வரய்யா டெர்மினல்) அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டுமே,  ஏற்கனவே இந்த வழித்தடங்களில் இயங்கும் பழைய ரயில்களை விட வேகமாக இயங்கும். மேலும் பயணிகளுக்கு வசதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்கள் மட்டுமின்றி, அயோத்தியில் ராம் மந்திர் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, புதிய விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

ரூ. 240 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios