விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவல் சமீபகாலமாக பல தேவை இல்லாத பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. காலம் காலமாக விவசாயத்தை பாரம்பரியமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் , மாடுகளை தெய்வமாகவே வணங்கி வருகின்றனர் விவசாயிகள்.

ஆனால் மாடுகளை இங்கு கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டிய பீட்டா அமைப்பு, தொடர்ந்து ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளுக்கு தடையாக நின்றது.விவசாயத்தையும், நாட்டு மாடுகள் இணத்தையும் காக்கும் நோக்குடன் இந்த ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்காக, தமிழக மக்கள் கடுமையாக போராடி இந்த விஷயத்தில் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து இந்த பீட்டா அமைப்பு மாடுகள் விவகாரத்தில் இது போல ஏதாவது புது பிரச்சனையை கிளப்புவதை இன்னும் விடவில்லை. இதற்கு சமீபத்தில் அவர்கள் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவே உதாரணமாக அமைந்திருக்கிறது. நேற்று கோகுலாஷ்டமி கிருஷ்ணரின் பிறந்த நாளான நேற்றைய தினத்தை இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் பண்டிகையாக கொண்டாடினர். அதிலும் வட இந்தியாவில் இந்த பண்டிகை மிக பிரபலம்.

கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணேய் மற்றும் நெய்யில் செய்த பலகாரங்கள் போன்றவற்றை படைத்து வழிபடுவது வழக்கம். இந்த பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் பீட்டா அமைப்போ, ”பசுக்களை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள அதன் பாலில் இருந்து எடுக்கப்படாத, பிற காய்கறிகள் மூலம் கிடைக்கும் வனஸ்பதி போன்றவற்றை பயன்படுத்தி, இந்த கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடுங்கள்.” என டிவிட்டரில் கூறி இருக்கின்றனர்.

பீட்டா அமைப்பு இவ்வாறு கூறி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பசுக்களை தெய்வமாக வணங்கும் எங்களுக்கு தெரியும் அவைகளை சந்தோஷமாக பார்த்துக்கொள்வது எப்படி என. நீங்கள் இது விஷயமாக அறிவுறை கூற தேவை இல்லை என பீட்டாவின் இந்த ட்வீட்டிற்கு காட்டமாக பதிலளித்து வருகின்றனர் மக்கள்.