Asianet News TamilAsianet News Tamil

இந்த மாநிலத்தில் திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம்.. விரைவில் புதிய திட்டம்.. முதலமைச்சர் அறிவிப்பு

திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

Pension for unmarried people in this state..New scheme coming soon..Chief minister announcement
Author
First Published Jul 3, 2023, 7:31 AM IST

ஹரியானா, மாநிலத்தில் 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். கர்னாலில் உள்ள கலம்புரா என்ற குக்கிராமத்தில் நடந்த ஜன் சம்வாத் என்ற விழாவில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார், இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஒரு மாதத்திற்குள் இத்திட்டம் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிடும் என்றும் உறுதியளித்தார்.

அடுத்த 6 மாதங்களில், மாநிலத்தின் பழைய ஓய்வூதியம் மாதம் ரூ.3000-ஆக அதிகரிக்கும் என்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார், கிராமப்புறங்களில் இணைய வசதி அவசியம் என்று கூறிய அவர், ஒவ்வொரு குக்கிராமத்திலும் பிஎஸ்என்எல் இணைய வசதியை வழங்கும் முதல் மாவட்டமாக கர்னால் இருக்கும் என்றும் கூறினார். மேலும், கர்னால் மாவட்டத்தில், 70 முதல் 80 சதவீத பணிகள் ஆன்லைனில் முடிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

பாஜகவின் பி-டீம் இவருதான்.. கே.சி.ஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமரிடம் இருக்கு - ராகுல் காந்தி ஆவேசம்

யமுனாநகரில் அமைக்கப்படவிருந்த 800 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் ஜார்க்கண்டில் உள்ள பிட்ஹெட் பகுதியில் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதைத் தொடர்ந்து அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்ற செய்திக்கு பதிலளித்த மனோகர் லால் கட்டார், “ யமுனாநகரில் ஆலையை அமைப்பதால் வேலை வாய்ப்பும் கிடைக்கும், ஆனால் அனுமதி பெறத் தவறினால், சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மத்திய நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவை எடுப்போம்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ போக்குவரத்து மற்றும் இதர செலவுகளைக் குறைக்க பிட்ஹெட்டில் அனல் மின் நிலையங்களை அமைக்கும் தேசியக் கொள்கையின் ஒரு பகுதி இது. ஆனால் பானிபட்டின் சில மின் உற்பத்தி நிலையங்கள் அவற்றின் ஆயுட்காலம் முடிந்துவிட்டதால் யமுனாநகரில் மின் உற்பத்தி நிலையம் முன்மொழியப்பட்டது. நமக்கு யமுனாநகரில் நிலம் உள்ளது, ஆனால் மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) பரிந்துரையின்படி திட்டம் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கட்டார், ஹரியானா அரசு நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். அந்தநிகழ்ச்சியில், மாவட்டத்தில் விளையாட்டு வளாகம், உடற்பயிற்சி கூடம், நூலகம், வயம்சாலை அமைக்க வேண்டும், பள்ளிக் கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற பெரும்பாலான கோரிக்கைகளை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.

கலம்புரா கிராமத்தில் சமஸ்கிருதி மாதிரி பள்ளி அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். முக்யமந்திரி அந்த்யோதயா பரிவார் உத்தன் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதன் மூலம் 50,000 பேருக்கு சுயதொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். 

அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்

Follow Us:
Download App:
  • android
  • ios