பாஜகவின் பி-டீம் இவருதான்.. கே.சி.ஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமரிடம் இருக்கு - ராகுல் காந்தி ஆவேசம்
கே.சி.ஆரின் கட்சியை பாஜகவின் பி-டீம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தெலுங்கானா முதலமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். தெலுங்கானவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.சி.ஆரின் கட்சியை பாஜகவின் பி-டீம் என்று அழைத்த ராகுல் காந்தி, பிஆர்எஸ் ஒரு பகுதியாக இருந்தால், எந்த எதிர்க்கட்சி கூட்டத்திலும் காங்கிரஸ் சேராது என்று கூறினார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் பி. டீம் பிஆர்எஸ் இடையேயான சண்டை இருக்கிறது. கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்தது போல, தெலுங்கானாவிலும் அவர்களின் பி அணியை தோற்கடிப்போம்” என்று பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார். மாநிலத்தின் ஆளும் கட்சியை "பாஜகவின் பி-டீம்" என்றும், அதன் புதிய பெயரான பிஆர்எஸ், 'பாஜக ரிஷ்தேதார் கட்சி' என்றும் ராகுல் காந்தி வர்ணித்தார்.
தெலுங்கானா முதல்வர் மீது கிண்டலாக பேசிய ராகுல் காந்தி, கேசிஆரின் ரிமோட் கண்ட்ரோல் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருப்பதாக கூறினார். பிஆர்எஸ் சம்பந்தப்பட்ட எந்தக் கூட்டத்திலும் காங்கிரஸ் சேராது என்று சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது மற்ற அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தெரிவித்ததாக ராகுல் காந்தி மேலும் கூறினார்.
கடந்த மாதம், பிஹார் மாநிலம் பாட்னாவில் 12க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கூடி பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை உருவாக்கியது. பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளது. பிஆர்எஸ் மற்றும் சில பாஜக அல்லாத கட்சிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்