Kashmir attack aftermath: Heavy rush for air passengers in Srinagar: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப், ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி 

இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். இந்த தாக்குதலை அடுத்து நண்பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெயசங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: 3 பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல்

இந்நிலையில் தீவிரவாத தாக்குதலை அடுத்து ஸ்ரீநகர் மற்றும் பஹல்காம் பகுதிகளில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக பஹல்காம் பகுதிகளை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலா பயணிகளும் ஸ்ரீநகர் விமானம் நிலையம் வந்தடைந்து அங்கு இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: மோடியிடம் போய் சொல்... கணவரை இழந்த பெண்ணிடம் பயங்கரவாதிகள் சொன்ன மெசேஜ்

கூடுதல் விமான சேவைகளை இயக்க உத்தரவு

இதனால் ஸ்ரீநகர் விமான நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு 4 கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது இரண்டு விமானங்கள் டெல்லிக்கும், 2 விமானங்கள் மும்பைக்கும் இயக்கப்பட உள்ளது. இதன் காரணமாக விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஸ்ரீநகருக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.