26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படை இந்தப் படங்கள் வரையப்பட்டுள்ளன.

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படை இந்தப் படங்கள் வரையப்பட்டுள்ளன.

மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளி பஹல்காம் ரிசார்ட் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்தத் தாக்குதலால் காஷ்மீருக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் அவசரமாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். இதனால், விமான நிலையத்தில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. பயணிகளின் தேவைக்காக கூடுதல் விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்காக விமானக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்! பதற்றத்துடன் வெளியேறும் சுற்றுலா பயணிகள்! ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல்!

Scroll to load tweet…

மூன்று பயங்கரவாதிகள்:

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு உதவியவர்கள் யார், அவர்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல யார் உதவி செய்தார்கள் என்று அறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதல் நடைபெற்ற பகுதி முழுமையாக பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் பயங்கரவாதிகள் ராணுவத்தினர் போல உடை அணிந்திருந்தனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் கூறியதில் தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் உருவப்படங்கள் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

வரைபடம் வெளியான சில மணிநேரங்களில் பயங்கரவாதிகளின் புகைப்படம் ஒன்றையும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது.

திட்டங்களில் மாற்றம்:

பஹல்காம் தாக்குதலை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை பாதியில்ல் முடித்துக்கொண்டு டெல்லிக்குத் திரும்பினார். அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை காஷ்மீருக்கு விரைந்தர். புதன்கிழமை தாக்குதல் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது சுற்றுப்பயணத்தைக் கைவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதைத் தொடர்ந்து இன்று பாதுகாப்பத்துறைக்கான அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் கடுமையான பதில் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது.

2000 முதல் 2025 வரை: காஷ்மீரில் பொதுமக்களை குறிவைக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள்