Asianet News TamilAsianet News Tamil

IndiGo: நடுவானில் விமானக் கதவைத் திறக்க முயன்ற பயணி!

நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கால பயன்பாட்டுக்கான கதவை திறக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Passenger tries to remove emergency exit cover on Nagpur-Mumbai IndiGo flight
Author
First Published Jan 29, 2023, 6:49 PM IST

இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று நாக்பூரில் இருந்து மும்பைக்குச் சென்றுகொண்டிருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் தரை இறங்க இருந்த சமயத்தில் அதில் பயணம் செய்த ஒருவர் விமானத்தின் அவசரகால கதவைத் திறக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பாக விமான ஊழியர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடுவானில் விமானக் கதவைத் திறக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இச்சம்பவம் பற்றி தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், “இண்டிகோ நிறுவனம் விமானங்களைப் பாதுகாப்பாக இயக்குவதில் எந்த சமரசமும் செய்துகொள்ளாது” என்று கூறியிருக்கிறது.

Anil Antony: பிசிசி செய்த அபத்தத்தைப் பாருங்க... மேப்பைக் காட்டி ட்வீட் போட்ட அனில் அந்தோணி

கடந்த 10ஆம் தேதி சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்ட இண்டிகோ 6E-7339 விமானத்திலும் பயணி ஒருவர் அவசரகால கதவைத் திறக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன் இச்சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதம் ராஞ்சி விமான நிலையத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற விடாமல் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் தடுத்தனர். இதற்காக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது நினைவூட்டத்தக்கது.

From The India Gate: காங்கிரசின் பிரார்த்தனையும் ஆம் ஆத்மியின் தலைமைத் தேடலும்

சில வாரங்களுக்கு முன் பெங்களூரு விமான நிலையத்தில் கோ ஃபர்ஸ்ட் விமானம் 55 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமல் விட்டுச் சென்றது. இதனால் அந்த நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு வெவ்வேறு விமானங்களில் பயணி ஒருவர் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் அவசர கால பயன்பாட்டுக்கான கதவை திறக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios