நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் தேதி குறித்து, மத்திய அமைச்சரவைக்‍ குழு இன்று முடிவு செய்யவுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்‍கான அமைச்சரவைக்‍ குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் இக்‍கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர்காலக்‍ கூட்டத் தொடர் தொடங்குவதற்கான தேதி முடிவெடுக்‍கப்படும் என தெரிகிறது. பொதுவாக, நவம்பர் மாதத்தின் 3 அல்லது 4-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவது வழக்‍கம். ஆனால், இந்த முறை நவம்பர் முதல் வாரத்திலேயே கூட்டத் தொடரை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன