நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரெயில்வே, பொது பட்ஜெட்டுக்கான 4 துணை மானியக் கோரிக்கை உள்ளிட்ட 25 மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 22 நாட்கள் அதாவது டிசம்பர் 16ந்தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

அறிமுகமாகும் மசோதாக்கள், பரிசீலனை மற்றும் நிறைவேற்றப்பட உள்ளவை

1. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, 2016

2. ஒருங்கிணைக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, 2016

3. சரக்கு மற்றும் சேவை வரி(வருவாய் இழப்பீடு ஈடு செய்யும் மசோதா, 2016

4. இந்திய மேலாண்மை நிறுவன மசோதா, 2016

5. வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா, 2016

6. விவாகரத்து சட்டத்திருத்த மசோதா, 2016

7. புள்ளிவிவரங்கள் தொகுப்பு சட்டத்திருத்த மசோதா, 2016

8. எஸ்.டி.(பழங்குடியினர்)பிரிவினருக்கான சட்டத்திருத்த மசோதா, 2016

8. கடற்படை நிர்வாகக்குழு மசோதா, 2016

மக்களவையில் நிறைவேற்றப்பட உள்ள மசோதாக்கள்
1. மன நலம் சார்ந்த பாதுகாப்பு மசோதா, 2016
2. பெண்களுக்கான மகப்பேறு நலன் சட்டத்திருத்த மசோதா, 2016
3. நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2015
4. குடியுரிமைக்கான சட்டத்திருத்த மசோதா, 2016

மாநிலங்கள் அவையில் நிலுவையில் இருக்கும் மசோதாக்கள்

1. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ்(தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மசோதா, 2014

2. ஊழியர்கள் இழப்பீடு சட்டத்திருத்த மசோதா, 2016

3. தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, 2016

4. ரகசியங்கள் வெளியிடுவோர் பாதுகாப்பு(விசிலூதிகள்) மசோதா, 2013,

5. ஊழல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா, 2013

6. எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதா, 2016

நிதி விவகாரங்கள்

1. பொது பட்ஜெட் 2016-17, 2-வது துணை மானியக்கோரிக்கை

2. 2013-14ம் ஆண்டிற்கான கூடுதல் நிதி அளிப்பதற்கான துணை மானியக்கோரிக்கை

3. 2016-17 ரெயில்வேதுறைக்கான துணை மானியக்கோரிக்கை.

4. 2013-14ம் ஆண்டில் ரெயில்வே துறைக்கான கூடுதல் நிதி அளிக்கும் மசோதா.

திரும்பப் பெறப்படும் மசோதாக்கள்

மக்களவை- உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற மசோதா, 2016

மாநிலங்களவை- மேலாண்மையில் பணியாளர்கள் பங்கெடுப்பு மசோதா, 1990.