நீட், நீட் என எதிர்க்கட்சிகள் முழக்கம்.. வினாத்தாள் கசிவை தடுக்க கடும் நடவடிக்கை என குடியரசு தலைவர் உறுதி..

தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

Parliament Session President Droupadi Murmu joint address Probe will fix accountability President on NEET paper leak Rya

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் கூட்டக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார். மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக இன்று உரையாற்றினார். புதிய உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்து தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் “ 60 ஆண்டுகளுக்கு பிறகு 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று, போர் சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். புதிய முன்னேற்றங்களில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. பல பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என்று உலக நாடுகள் நம்புகின்றன. 

LK Advani: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி டெல்லி எய்ஸ்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறிய நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது. சாலைகளை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.” என்று தெரிவித்தார். தொடர்ந்து அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர் என முழக்கமிட்டனர். வட கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்தார். 

எனினும் குடியரசு தலைவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது “ பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அரசாங்கம் இயற்கை விவசாயம் மற்றும் அது சார்ந்த பொருட்களை ஒருங்கிணைத்து வருகிறது.. .இந்தியாவின் முயற்சியால் உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டு சர்வதேச தினை தினத்தை கொண்டாடியுள்ளது. சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 

"உங்கள் வேலையை செய்ய எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உதவும்.." ஓம் பிர்லாவுக்கு ராகுல்காந்தி வாழ்த்து..

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. 3 கோடி பெண்களை லட்சாதியாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களால் பெண்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளனர்” என்று கூறினார்.

மேலும் “ ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது. 55 கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் பார்த் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசத்தில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். புதிய மருத்துவ கல்லூரிகள் பற்றி குடியரசு தலைவர் பேசிய போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் நீட், நீட் என முழக்கமிட்டனர். அப்போது தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், வினாத்தாள் கசிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios